மசால் வடை மொறுவலாகவும், சுவையாகவும் இருக்க...
உருளைக்கிழங்கை மணலில் வைத்தால் சீக்கிரமாக கெட்டுப்போகாது.
கடலை மாவு, அரிசி மாவு இல்லாவிட்டால் கோதுமை மாவிலும் சுவையான பஜ்ஜி செய்யலாம்.
பருப்புப்பொடி தயாரிக்கும் போது இரண்டு ஸ்பூன் ஓமம் சேர்த்து அரைத்தால் ,மணமாக இருக்கும். ஜீரணத்துக்கும் நல்லது.
குருமாசெய்யும்போதுவெங்காயம், தக்காளி, இஞ்சி, பூண்டு,கசகசாபெருஞ்சீரகம், முந்திரியுடன், கல்பாசி, ஏலக்காய், சிறிதளவு தேங்காய் துருவல் அல்லது தேங்காய் பால் சேர்த்து வதக்கி மிக்ஸியில் அரைத்து செய்யும் குருமா தனி ருசியுடன் மணமாக இருக்கும். இட்லி தோசைக்கு தொட்டு சாப்பிட சுவையாக இருக்கும்.
மசால் வடை செய்யும்போது மாவில் அரைமணி நேரம் ஊறிய ஜவ்வரிசி 4 ஸ்பூன், பாசிப்பருப்பு 3 ஸ்பூன் கலந்து வடை செய்தால், மொறுவலாகவும், சுவையாகவும் இருக்கும்.
ரசத்திற்கு மிளகு, சீரகம் அரைக்கும் போது அதனுடன் சிறிது கொள்ளு சேர்த்தால், ரசத்தின் சுவை கூடும்.
0
Leave a Reply