25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >>


MAY 24 TH விளையாட்டு போட்டிகள்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

MAY 24 TH விளையாட்டு போட்டிகள்

டென்னிஸ் 

ஜார்ஜியாவில் சாலஞ்சர் கோப்பை டென்னிஸ் தொடர் நடக்கிறது. இரட்டையர் பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் ராம்குமார் ராமநாதன், சித்தாந்த் ஜோடி, பிரிட்டனின் ஒயிட்ஹவுஸ், டாம் ஹேண்ட்ஸ் ஜோடியை சந்தித்தது.58 நிமிடம் நடந்த போட்டியின் முடிவில் இந்திய ஜோடி 6-4, 6-2 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று, பைனலுக்கு முன்னேறியது. 

பாட்மிண்டன்  

மலேசிய தலைநகர் கோலாலம்பூரில்,'சூப்பர்500' மாஸ்டர்ஸ் பாட்மின்டன் தொடர் நடக்கிறது. ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் இந்தியாவின் ஸ்ரீகாந்த், பிரான்சின் டோமா ஜூனியர் போபோவ் மோதினர். முதல் செட்டை 24-22 என போராடி கைப்பற்றினார்., 3வது செட்டில் எழுச்சி கண்ட ஸ்ரீகாந்த்22,20 என போராடி தன்வசப்படுத்தினார். ஒரு மணிநேரம்,14 நிமிடம் நீடித்த போட்டியில் அசத்திய ஸ்ரீகாந்த் 24-22, 17-21, 22-20 என்ற கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்குள் நுழைந்தார். 

துப்பாக்கி சுடுதல் 

ஜூனியர் உலக கோப்பை துப்பாக்கிசுடுதல் ஜெர்மனியில்நடக்கிறது. பெண்களுக்கான ஸ்கீட் பிரிவு போட்டி நடந்தது. இதன் தகுதிச்சுற்றில் இந்தியாவின் ரைசா தில்லான்,116 புள்ளியுடன் இரண்டாவது இடம் பிடித்து பைனலுக்கு முன்னேறினார். அடுத்து நடந்த பைனலில் ரைசா, 51 புள்ளியுடன், இரண்டாவது இடம் பெற்று. வெள்ளிப்பதக்கம் கைப்பற்றினார். 

ஆண்களுக்கான50 மீ., ரைபிள்3 பொசிசன்ஸ் போட்டி தகுதிச்சுற்றில் இந்தியாவின் அட்ரியன் கர்மாகர்(588)4வது இடம் பெற்று, பைனலுக்கு முன்னேறினார். பைனலில் பெரும்பாலான நேரத்தில்4வது இடத்தில் இருந்த அட்ரியன், கடைசி நேரத்தில் சிறப்பாக செயல்பட,446.6 புள்ளியுடன் மூன்றாவது இடம் பெற்று, வெண்கலம் வசப்படுத்தினார். இத்தொடரில் இவர் வென்ற இரண்டாவது பதக்கம் இதுவரை ஒரு தங்கம், 2 வெள்ளி, 1 வெண்கலம் என 4 பதக்கம் வென்ற இந்தியா, பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News