வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் அவர்கள் சாத்தூர், அருப்புக்கோட்டை மற்றும் வெம்பக்கோட்டை ஆகிய வட்டாரங்களில் செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து ஆய்வு.
விருதுநகர் மாவட்டம், சாத்தூர் வெங்கடேஸ்வரா மஹாலில் (13.03.2025) மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S., அவர்கள் தலைமையில், சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஏ.ஆர்.ஆர்.ரகுராமன் அவர்கள் முன்னிலையில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அவர்கள், சாத்தூர், அருப்புக்கோட்டை மற்றும் வெம்பக்கோட்டை ஆகிய வட்டாரங்களில் செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
அதன்படி, பொதுப்பணித்துறை, தமிழ்நாடு மின்சார வாரியம், நெடுஞ்சாலைத்துறை, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் நகராட்சிகளுக்கான கூட்டுக் குடிநீர் திட்டம், கிராம குடியிருப்புகளுக்கான கூட்டு குடிநீர் திட்டம், பாதாள சாக்கடை திட்டம், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள், நீர்வளத்துறை, சுகாதாரத்துறை, பள்ளிக் கல்வித்துறை, மதிய உணவு திட்டம், வேளாண்மைத்துறை, கால்நடை பராமரிப்புத்துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, 15 வது பொது நிதி குழு மானியத்தின் கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் பணிகள், மாநில நகர உட்கட்டமைப்பு மேம்பாட்டு நிதி, கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டம், மாநில நிதி கழகம், கலைஞரின் கனவு இல்லம், ஊரக வீடுகள் சீரமைப்பு திட்டம், இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் உள்ள தமிழர்களுக்கான நலத்திட்டங்கள், பிரதம மந்திரி குடியிருப்பு வீடுகள் திட்டம்,
அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டம், பொது நூலகத்துறை, சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி, பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி, நமக்கு நாமே திட்டம், நபார்டு நிதி, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், தூய்மை பாரத இயக்கம், அனைத்து வீடுகளுக்கான குடிநீர் இணைப்பு வழங்கும் உயிர் நீர் இயக்கம், நெடுஞ்சாலை சாலை மற்றும் சிறு பாலங்கள், முதலமைச்சரின் கிராம சாலை மேம்பாட்டு திட்டம், பொது நிதி, கனிமவள நிதி உட்பட பல்வேறு திட்டங்கள் மற்றும் நிதிகளின் மூலம் செயல்படுத்தப்பட்டுள்ள பணிகள் மற்றும் மேற்கொள்ளப்படவுள்ள பணிகள், இலக்கு நிர்ணயம் செய்யப்பட்ட பணிகள், முடிவுற்ற பணிகள், நிலுவையில் உள்ள பணிகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டு, நிலுவையில் உள்ள பணிகள் மற்றும் நடைபெற்று வரும் பணிகளை தரமாக விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என தொடர்புடைய அரசு அலுவலர்களை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் அவர்கள் அறிவுறுத்தினார்.
மேலும், பல்வேறு துறைகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள பணிகள், நிலுவையிலுள்ள பணிகள், முடிவுற்ற பணிகள், நடைபெற்று வரும் பணிகளை விரைந்தும், தரமானதாகவும் உரிய காலத்திற்குள் செய்து முடித்து பொது மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என தொடர்புடைய அரசு அலுவலர்களை அறிவுறுத்தினார். தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தலைமையிலான அரசு கடந்த நான்கு ஆண்டுகளில் அரசின் அனைத்து திட்டங்களும் சாமானிய மக்களுக்கும் கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் செயல்பட்டு வருகிறது. விருதுநகர் மாவட்டத்தில் மேற்கொள்ள வேண்டிய பணிகள், பிரத்யேக திட்டங்கள் உள்ளிட்டவைகள் குறித்து தொடர்ச்சியாக அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று நிறைவேற்றப்பட்டு வருகிறது.
ஊராட்சி ஒன்றியங்களில் மக்கள் பிரதிநிதிகள் இல்லாததால் அரசு அதிகாரிகள் மக்களிடமிருந்து பெறப்படும் கோரிக்கைகளை உடனுக்குடன் நிறைவேற்றிட வேண்டும். குடிநீர் விநியோகம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். குப்பைகளை அகற்றுதல், தெரு விளக்குகள் அமைத்தல் கோரிக்கைகள் தொடர்பாக உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். தகுதியான பயனாளிகளை கண்டறிந்து அவர்களுக்கென அரசு நலத்திட்டங்களை கொண்டு சேர்க்க வேண்டும். சாலை மேம்பாட்டு பணிகளை உரிய நேரத்தில் முடிக்க வேண்டும். அருப்புக்கோட்டை மற்றும் இராஜபாளையம் அரசு மருத்துவமனை கூடுதல் கட்டடங்கள் திட்டப் பணிகளை முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு மிக விரைவில் கொண்டுவர வேண்டும்.
ஊரக வளர்ச்சித் துறை சார்பில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைத்து தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்துடன் இணைந்து, தண்ணீர் வழங்காமல் உள்ள கிராமங்களில் சம்மந்தப்பட்ட துறைகளை ஒருங்கிணைத்து குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.மேலும், மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களில் நிர்வாக சிக்கல் இருக்கும்பட்சத்தில் அதனை மாவட்ட நிர்வாகத்திற்கு கொண்டு சென்று நிவர்த்தி செய்வதற்கான முயற்சிகளைசெய்யவேண்டும்எனதெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில் அனைத்துத்துறை அரசு அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
0
Leave a Reply