25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >>


“காபி வித் கலெக்டர்” நிகழ்ச்சியின் 150-வது அமர்வு சிறப்பு நிகழ்ச்சியில்  எவரெஸ்ட் சிகரத்தை தொட்ட முதல் தமிழ்ப்பெண் திருமதி முத்தமிழ்ச்செல்வி அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

“காபி வித் கலெக்டர்” நிகழ்ச்சியின் 150-வது அமர்வு சிறப்பு நிகழ்ச்சியில் எவரெஸ்ட் சிகரத்தை தொட்ட முதல் தமிழ்ப்பெண் திருமதி முத்தமிழ்ச்செல்வி அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்  (28.01.2025) மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S, அவர்கள் தலைமையில், பல்வேறு துறைகளில் ஆர்வம் கொண்ட 150 பள்ளி, கல்லூரி மாணவ மாணவியர்கள் கலந்து கொண்ட சிறப்பு Coffee with Collector- 150- வது கலந்துரையாடல் நிகழ்ச்சியில் எவரெஸ்ட் சிகரத்தை தொட்ட முதல் தமிழ்ப்பெண் திருமதி முத்தமிழ்ச்செல்வி அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

விருதுநகர் மாவட்டத்தில் பள்ளிகளில் பயிலும் மாணவர்களில் கல்வி, பொது அறிவு, விளையாட்டு, ஓவியம், இசை உள்ளிட்ட பல்வேறு திறன் அடிப்படையில் மாணாக்கர்களின் திறன்களை கண்டறிந்து, மாணவ, மாணவியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் அழைத்து கலந்துரையாடும் “காபி வித் கலெக்டர்” நிகழ்ச்சி 07.01.2022 அன்று தொடங்கப்பட்டு, மொத்தம் 149 கலந்துரையாடல் நிகழ்ச்சிகள் நடைபெற்றுள்ளது.இந்த நிகழ்ச்சியின் முக்கிய நோக்கம், மாணவர்களுடைய உயர்ந்த இலட்சியம், அவர்களுடைய உயர்கல்வி பயில்வதற்கு வழிகாட்டுதல், போட்டி தேர்வுகளை எதிர்கொள்ளுதல், தோல்வியை எவ்வாறு எதிர்கொள்வது, அவர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் அவர்களுடைய சந்தேகங்களை அகற்றி, அவர்கள் வாழ்க்கையில் எங்கு பிறந்தோம், நாம் அரசு பள்ளியில் பயின்றோம், நமக்கு வசதி இல்லை, நமக்கு பின்புலம் இல்லை என்பதெல்லாம், வாழ்க்கையில் ஒரு உயர்ந்த இடத்தை அடைவதற்கு ஒரு தடை இல்லை என்பதை புரிய வைத்து, தன்னம்பிக்கை, விடா முயற்சி, கடின உழைப்புடன் தொடர்ந்து உழைத்தால்  நாம் எதையும் சாதிக்க முடியும் என்பதை உணர்த்தும் வகையில் சரியான வழிகாட்டுதல் வழங்குவதே இந்த நிகழ்ச்சியின் முக்கிய நோக்கமாகும்.
மேலும் இந்நிகழ்ச்சியில் சாதனையாளர்கள், அரசு உயர் அலுவலர்கள், பிரபலங்கள் சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்பட்டு, தங்களின் துறை மற்றும் பணிகள்  சார்ந்த வாய்ப்புகள், படிப்புகள் மற்றும் அதற்கான திறமைகள் குறித்து மாணவர்களிடையே உரையாற்றி ஊக்கப்படுத்தி, அவர்களின் கேள்விகள் மற்றும் சந்தேகங்களை நிவர்த்தி செய்து வருகின்றனர்.

அதன்படி, இன்று நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியில் ; எவரெஸ்ட் சிகரத்தை தொட்ட முதல் தமிழ்ப்பெண் திருமதி முத்தமிழ்ச்செல்வி அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, தான் சிறுவயது முதல் தற்போது இந்த நிலைமைக்கு வந்த அனுபவங்கள், வாழ்க்கை கண்ட தோல்விகள், அதை ஒரு சவாலாக ஏற்று கொண்டு அதிலிருந்து கற்றுக் கொண்ட பாடங்கள் குறித்தும், தனக்கு மலையேற்றத்தில் ஆர்வம் வந்தது, அதில் தொடர்ச்சியாக பயிற்சி மேற்கொண்டு பல சாதனைகள் புரிந்து வருவது குறித்தும் உரையாடி, மாணவ, மாணவிகளின் எண்ணற்ற கேள்விகள் மற்றும் சந்தேகங்களுக்கு பதிலளித்தார்.

இந்தத் துறை மட்டுமல்லாமல் மாணவர்கள் தங்களுக்கு பிடித்த எந்த துறையிலும் சாதிக்க முடியும். அதற்காக தங்களது இலக்கை நீங்கள் வகுத்துக் கொள்ள வேண்டும். அதனையே குறிக்கோளாக கொண்டு, இலக்கை அடைவதற்கான வழிகளை அறிந்து கொண்டு தொடர் முயற்சி மூலமும், தோல்விகளிலிருந்து பாடங்களை கற்றுக் கொண்டும், தொடர் தோல்விகளினால் தொய்வு அடையாமல் ஒழுக்கத்துடன் தங்களது பணியை மேற்கொள்ளும் போது அந்த துறையில் நாம் சாதிக்க முடியும். இது ஒவ்வொருவராலும் முடியும் என தெரிவித்தார்இந்த சந்திப்பில் மாணவ, மாணவியர்கள் உற்சாகத்துடன் கலந்து கொண்டு,  இந்த நிகழ்ச்சி மூலம் எங்களுக்கு ஒரு புத்துணர்வு, ஊக்கம் அளிப்பதாகவும்,  எங்களுடைய கேள்விகள் மற்றும் சந்தேகங்களுக்கு மாவட்ட ஆட்சியர் அவர்களும், சிறப்பு விருந்தினர்களும் தெளிவான விடை கொடுத்ததாகவும்,  இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்த மாவட்ட ஆட்சித்தலைவர்  அவர்களுக்கு மாணவர்கள் தங்களது நன்றிகளை தெரிவித்துக்கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில், திட்ட இயக்குநர்(மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) மரு.தண்டபாணி, உதவி ஆட்சியர்(பயிற்சி) திரு.ஹிமான்சு மங்கள்,I A S., உட்பட மாணவர்கள், அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News