25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >>


வெங்காயம்தாவரங்களில் இருக்கும் நுண்ணியசெல்லுலோஸ் நார்களாலான 'நானோ செல்லுலோஸ்’.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

வெங்காயம்தாவரங்களில் இருக்கும் நுண்ணியசெல்லுலோஸ் நார்களாலான 'நானோ செல்லுலோஸ்’.

சூரிய ஆற்றலை மின்சாரமாக மாற்றக்கூடியவை சூரிய மின் தகடுகள். இவை நீண்ட நேரம்சூரிய  ஓளியில் வைக்கப்படுகின்றன. அப்போது சூரிய ஒளியுடன் சேர்ந்து புற ஊதாக் கதிர்களும் இவற்றின் மீது படுகின்றன. இதனால் இவற்றின் ஆயுட்காலம் குறைகிறது. எனவே சூரிய ஒளியை மட்டும் அனுமதித்து புறஊதாக் கதிர்களைத் தடுத்து நிறுத்தும்படியான படலங்களைமின் தகடுகள் மீது பொருத்த வேண்டி உள்ளது. தற்போது பெட்ரோலியப் பொருட்களில் இருந்து கிடைக்கும் படலங்கள் தான் பயன்படுகின்றன." ஆனால், இவற்றின் தயாரிப்பு, பயன்பாடுஇரண்டுமே சுற்றுச்சூழலுக்கு தீங்கானவை. எனவே சுற்றுச்சூழலை மாசுபடுத்தாத படலத்தைக் கண்டுபிடிக்க வேண்டும் என்று விஞ்ஞானிகள் ஆராய்ந்து வந்தார்கள்.

நெதர்லாந்து, பின்லாந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்தசில முக்கியப்பல்கலைக்கழகங்கள் இதற்குத் தீர்வு கண்டுள்ளன. தாவரங்களில் இருக்கும் நுண்ணியசெல்லுலோஸ் நார்களாலான 'நானோ செல்லுலோஸை' படலமாகப் பயன்படுத்தலாம். ஆனால், இதை அப்படியே பயன்படுத்த இயலாது.எனவே, வெங்காயத்தாளில் இருந்து அந் தோசயனின் என்கின்ற ஒருவித சாயத்தை எடுத்தனர். இதை நானோ செல்லுலோஸ் உடன் கலந்து, ஒரு படலத்தை உருவாக்கினர்.இதைப் புற ஊதாக் கதிர்களை வெளியிடக்கூடிய விளக்குக்கு முன்னால், 1000 மணி நேரம் வைத்துச் சோதித்தார்கள். இந்தப் படலம் 99.9 சதவீதக் கதிர்களைத் தடுத்து நிறுத்தியது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News