நுங்கு பாயசம்.
தேவையான பொருட்கள்: இன நுங்கு -5, பசும்பால் 1 லிட்டர், மில்க்மெய்டு -1 கப், சர்க்கரை 2 டேபிள் ஸ்பூன், ஏலக்காய்த் தூன் -1/2 ஸ்பூன், பாதாம் பருப்பு துருவல் - 2 டீஸ்பூன்,
செய்முறை: ஒரு பெரிய பாத்திரத்தில் பாலை ஊற்றி கொதிக்க வைக்கவும். கொதிக்கும் பாலில் மில்க்மெய்டை ஊற்றி 15 நிமிடங்கள் 'சிம்மில் வைத்து கிளறி, ஏலக்காய் மற்றும் நுங்குகளை சிறு சிறு துண்டுகளாக்கி போடவும்.
அடுப்பில் இருந்து இறக்கியவுடன் பாதாம் துருவலை கலக்கவும். சுவையான நுங்கு பாயசம் தயார். இதை குளிர்பதன பெட்டியில் (பிரிட்ஜ்) வைத்து பரிமாறினால் சுவை இன்னமும் அதிகமாக இருக்கும்.
0
Leave a Reply