உலகிலேயே அதிகமான ஊட்டச்சத்துகள் கொண்ட உணவுப் பட்டியலில் பழையசோறு முதலிடம்.
உலகிலேயே அதிகமான ஊட்டச்சத்துகள் கொண்ட உணவுப் பட்டியலில் பழையசோறு முதலிடம் வகிக்கிறது. இது அமெரிக்க விஞ்ஞானிகளின் ஆய்வு முடிவு.
'பிரியாணிகூட இரண்டு மணி நேரத்துல கிடைக்கும். ஆனா பழையசோறு வேணும்னா ஒருநாள் காத்து இருக்கணும்' என்று சொல்வார்கள் நமது வீட்டுப் பெரியவர்கள். அது உண்மை தான்.
சோற்றில் நீர் ஊற்றிய 15 மணி நேரத்துக்குள் சாப்பிட்டுவிடுவதுதான் ஆரோக்கியம் என்கிறார்கள் மருத்துவர்கள்.
அப்படி என்ன இருக்கிறது பழையசோற்றில்... வடித்த சோற்றில் 3, 4 மி.கி. இரும்புச்சத்து இருக்கிறது என வைத்துக்கொள்வோம். அதுவே, பழைய சோறாகும்போது, இரும்புச்சத்தின் அளவு 73.91 மி.கிராமாக இருக்கும்.
பழைய சோறு சாப்பிட்டால் தூக்கம் வரும், உடல் பருமன் உண்டாகும் என்பதெல்லாம் உண்மையல்ல; இது, எல்லா உணவுகளுக்குமே பொருந்தக்கூடியது.
பழைய சோற்றில் வேறு எந்த உணவுப் பொருட்களிலும் கிடைக்காத வைட்டமின் பி 6, பி 12 ஆகிய சத்துகள் அதிகளவில் நிரம்பியுள்ளன.
காலையில் இதைச் சாப்பிடுவதால், வயிறு தொடர்பான நோய்கள் குணமாகும்; உடலில் அதிகமாக இருக்கும் உஷ்ணத்தைப் போக்கும்.
பாரம்பரியத்தைப் போற்றுவோம்! இனி கொஞ்சம் பழைய சோற்றுக்கு மாறித்தான் பார்ப்போமே!
0
Leave a Reply