காரியாபட்டி சித்தனேந்தல் பால்சாமி ராஜம்மாள் நினைவு அறக்கட்டளை (PRAISE TRUST) சார்பில் ரூ.6 இலட்சம் மதிப்பிலான மருத்துவ உபகரணங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்களிடம் வழங்கப்பட்டது.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று(20.02.2026) காரியாபட்டி வட்டம், சித்தனேந்தல் பால்சாமி ராஜம்மாள் நினைவு அறக்கட்டளை (PRAISE TRUST) சார்பில் ரூ.6 இலட்சம் மதிப்பிலான மருத்துவ உபகரணங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்களிடம், ப்ரைஸ் அறக்கட்டளை நிர்வாக இயக்குநர் திருமதி சினேகலதா பொன்னையா அவர்கள் வழங்கினார்.
அதன்படி, காரியாபட்டி வட்டம், சித்தனேந்தல் பால்சாமி ராஜம்மாள் நினைவு அறக்கட்டளை (PRAISE TRUST) சார்பில் மல்லாங்கிணர் வட்டார ஆரம்ப சுகாதார நிலையங்களான காரியாபட்டி, கல்குறிச்சி, முடுக்கன்குளம், முஷ்டகுறிச்சி ஆகிய கிராமங்களில் செயல்படும் கூடுதல் ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அதற்குட்பட்ட 20 துணை சுகாதார நிலையங்களின் பயன்பாட்டிற்கு IFT- Machine for Physiotherapy, Multi Para Monitor, Pulse Oximeter, Digital Thermometer, Digital Weight Machine Adult, Digital weight Machine Paediatric, Air conditioner for Labour room, Crash cart, Water Heater, Height Machine, Glugo Meter, Stretcher with side rails, Suction apparatus single channel, Ro machine, Patient sitting stool, Magna vision Lamp, Suction apparatus (single Channel), Nebulizer, Multipara monitor, Wheel chair, Fridge, Ambu Bag (Adult), Dressing Trolley, Examination couch உள்ளிட்ட மொத்தம் ரூ.6 இலட்சம் மதிப்பிலான மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன.
இந்நிகழ்வில் துணை இயக்குநர்;(சுகாதாரப்பணிகள்) திருமதி மரு.யசோதாமணி(விருதுநகர்), எஸ்.பி.எம் அறக்கட்டளை நிறுவனர் திரு.எம்.அழகர்சாமி உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
0
Leave a Reply