வேளாண்மைத்துறை சார்பில், உயிர்ம வேளாண்மை விழிப்புணர்வு கண்காட்சி மற்றும் கருத்தரங்கு வருகிற 19.08.2025 அன்று நடைபெறவுள்ளது .
2025-2026 வேளாண் நிதிநிலை அறிக்கையில் மாண்புமிகு வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் அவர்கள் உயிர்ம வேளாண்மை சார்ந்த தொழில்நுட்பங்கள் குறித்த விழிப்புணர்வு கண்காட்சி அனைத்து மாவட்டங்களிலும் நடத்தப்பட உள்ளது என தெரிவிதுள்ளார்.அந்த அறிவிப்பை தொடர்ந்து, உயிர்ம வேளாண்மை கண்காட்சி மற்றும் கருத்தரங்கு விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி வட்டாரம் தோணுகால் கிராமத்தில் அசேபாவளாகத்தில் உள்ள திருமண மண்டபத்தில் 19.08.2025 அன்றுகாலை 10.00 மணியளவில் நடைபெற உள்ளது .
விருதுநகர் மாவட்ட விவசாயிகளுக்கு உயிர்ம வேளாண்மை குறித்த தொழில் நுட்பங்களை விளக்கவும், புதிய தொழில் நுட்பங்களை விவசாயிகள் அறிந்து கொள்ளும் வகையிலும், வேளாண் மற்றும் வேளாண் துறை சார்ந்த துறைகள், முன்னோடி விவசாயிகள் மற்றும் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களை கொண்டு கருத்துக்காட்சி அமைத்து காட்சிப்படுத்தப்பட உள்ளது.
இதில் வேளாண் அறிவியல் நிலையம் விஞ்ஞானிகள் மற்றும் வேளாண்மைதுறை அலுவலர்கள் ஆகியோர்கள் கலந்து கொண்டுவிவசாயிகள் மற்றும் விஞ்ஞானிகள் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளது.விருதுநகர் மாவட்டத்தில் அனைத்து வட்டாரங்களிலும் உள்ள விவசாயிகள் மேற்கண்ட மாவட்ட அளவிலான கண்காட்சி மற்றும் கருத்தரங்கில் கலந்து கொண்டு பயன்பெற வேண்டுமென மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.
0
Leave a Reply