25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >>


நில உடமைகளை பதிவு செய்து தனித்துவ அடையாள எண் பெறும் விவசாயிகள் மட்டுமே பிரதம மந்திரி விவசாயிகளின் கௌரவ நிதி உதவி தொகை பெறலாம்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

நில உடமைகளை பதிவு செய்து தனித்துவ அடையாள எண் பெறும் விவசாயிகள் மட்டுமே பிரதம மந்திரி விவசாயிகளின் கௌரவ நிதி உதவி தொகை பெறலாம்

விருதுநகர் மாவட்டத்தில் விவசாயிகளின் நில உடமைகளை சரிபார்த்தல் மற்றும் விவசாயிகளுக்கு அடையாள எண்  உருவாக்குதல்   பணிகள்  நடைபெற்று வருகிறது.

வேளாண்மை உழவர் நலத்துறை பணியாளர்கள் மூலம் விவசாயிகளின் நில உடமைகளை சரிபார்த்து விவசாயிகளுக்கு அடையாள எண் உருவாக்குதல்  பணிகள் நடைபெற்று வருகிறது.  இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்கள், சமுதாய வளபயிற்றுனர்கள் (CRP)  ஆகியோரும் இணைந்து இப்பணியினை மேற்கொண்டு வருகின்றனர். விருதுநகர் மாவட்டத்தில் மொத்தம் 51,681 பயனாளிகள் பிரதம மந்திரியின் விவசாயிகள் கௌரவ  நிதி தொகையினை பெற்று வருகின்றனர். ஆனால் 22,258 விவசாயிகள் மட்டுமே தனித்துவ அடையாள எண் பெற பதிவு செய்துள்ளனர்.

விருதுநகர் மாவட்ட விவசாயிகள் தங்களின் சொந்த கிராமங்களை விட்டு வேறு இடத்தில் வசித்தாலும் அருகில் உள்ள அனைத்து  இ-சேவை மையங்களில் தங்களின் நில உடமைகளை இலவசமாக பதிவு செய்து பயன்பெறலாம்.  தங்களுடைய பட்டா, ஆதார் அட்டை மற்றும் அலைபேசி எண் கொண்டு சென்று பதிவு செய்யக் கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு பதிவு செய்யப்பட்டு அடையாள எண் பெறும் விவசாயிகளுக்கு மட்டுமே மத்திய, மாநில அரசுகளின் மானிய திட்டங்களை ஒற்றை சாளர முறையில் பயன்படுத்த முடியும்.

மீதம் உள்ள 29,423 விவசாயிகள் வருகிற மார்ச்-31-ம் தேதிக்குள் தங்களின் நில உடமைகளை பதிவு செய்து அடையாள எண் பெற்று பயனடைய வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *