25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >>


ஓபன் 'சூப்பர் 500' பாட்மின்டன் தொடர்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

ஓபன் 'சூப்பர் 500' பாட்மின்டன் தொடர்

தாய்லாந்து ஓபன் 'சூப்பர் 500' பாட்மின்டன் தொடர் பாங்காக்கில், ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் லக்சயா சென், அயர்லாந்தின் நுயென் மோதினர். இதில் லக்சயா சென் F 18-21, 21-9, 17-21 என்ற கணக்கில் தோல்வியடைந்து வெளியேறினார்.

 மற்றொரு போட்டியில் இந்தியாவின் பிரியான்ஷு ரஜாவத் 13-21, 21-17, 16-21 என இந்தோனேஷியாவின்ஆல்வி பர்ஹானிடம் தோல்வியடைந்தார். 

பெண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் மாளவிகா பன்சோத், துருக்கியின் நெஸ்லிஹான் அரின் மோதினர். மாளவிகா 21-12, 13-21, 21-17 கணக்கில் வெற்றி பெற்றார். 

மற்றொரு போட்டியில் இந்தியாவின் ஆகர்ஷி காஷ்யப் 21-16, 20-22, 22-20 என ஜப்பா னின் சுகியமாவை தோற் கடித்தார். இந்தியாவின் உன்னதி ஹூடா 21-14, 18-21, 23-21 என தாய்லாந்தின் தமோன்வானை வென்றார்.

இந்தியாவின் ரக் ஷிதா ஸ்ரீ 18-21, 7-21 என சிங்கப்பூரின் யோ ஜியா மின்னிடம் வீழ்ந்தார்.

பெண்கள் இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் திரிசா, காயத்ரி கோபிசந்த்  ஜோடி 21-15, 21-13 என மலேசியாவின் கார் மென் டிங், ஆங் ஜின் யீ ஜோடியை வென்றது. 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News