பப்பாளி அல்வா!
தேவையான பொருட்கள்:
பால் -1 லிட்டர்
பப்பாளி பழம் - 1
ஆரஞ்சு ஜூஸ் - 1 கப்
சர்க்கரை - 500 கிராம்
நெய் - 250 கிராம்
முந்திரி,ஏலக்காய் துாள் - தேவையான அளவு
செய்முறை:
பப்பாளி பழத்தை தோல் நீக்கி, சிறு துண்டுகளாக நறுக்கி பாலில் வேக வைக்கவும். அதை விழுதாக அரைத்து,ஆரஞ்சு பழ ஜூஸ் சேர்க்கவும். கடாய் சூடானதும் நெய், சர்க்கரையுடன் அரைத்த விழுதை சேர்த்து கிளறவும். சுருண்டு வரும்போது முந்திரி, ஏலக்காய் துாள் போட்டு இறக்கவும். ஆறிய பின் துண்டுகளாக்கவும்.சுவை மிக்க,'பப்பாளி அல்வா!' தாயார். சத்துகள் நிறைந்தது. அனைத்து வயதினரும் விரும்பி உண்பர்.
0
Leave a Reply