முடங்கியார் ரோடு அதிகாரிகளின் மெத்தனத்தால் சிறிது சிறிதாக ஆக்கிரமிப்பிற்கு உள்ளாகி சாலையோர கடைகள், வாகனங்கள் ஆக்கிரமிப்பு.
அதிகாரிகளின் மெத்தனத்தால் சிறிது சிறிதாக ஆக்கிரமிப்பிற்கு உள்ளாகி, ராஜபாளையம் நகர் பகுதி நடுவே காந்தி சிலை ரவுண்டானா முதல் தாலுகா அலுவலகம் வரை உள்ள முடங்கியார் ரோடு சுருங்கிவிட்டது. இதனால் மக்கள் தினமும் போக்குவரத்து நெருக்கடிக்குள்ளாக வருகின்றனர்..
கடைகளுக்கு வருவோர் ரோட்டில் வாகனங்களை நிறுத்தி செல்வதும், வரிசையாக பார்க்கிங் பகுதிகளாக மாற்றியும் வருகின்றனர். தனியார் சந்தை முன்பு ஆட்டோக்கள் நிறுத்தும் இடமாக சாலையின் வெள்ளை கோடு மேல் வரை ஆக்கிரமித்து வைத்துள்ளனர். ஏற்கனவே இந்த இடம் குடியிருப்புகள் பள்ளி கல்லுாரி மாணவர்கள் கடக்கும் இடமாக இருந்து வருகிறது. இங்கு தனியார் சந்தை, உழவர் சந்தை அரசு கால்நடை மருத்துவமனை அருகருகே அமைந்துள்ளது.
போட்டி போட்டுக் கொண்டு ரோட்டை ஆக்கிரமித்து நிற்பதால் டூவீலரில் செல்வோர், பாதசாரிகள், பொதுமக்களுக்கு இடைஞ்சல் ஏற்பட்டு சாலையோர ஆக்கிரமிப்பு கடைகளும் முளைத்து நிரந்தர இடமாக மாற்றி வைத்துள்ளனர்.
நெடுஞ்சாலை துறையினரின் மெத்தனத்தால் சாமானிய மக்கள் விபத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.
ராஜபாளையம் நகர் பஞ்சு மார்க்கெட்டில் இருந்து கோயில் மாரியம்மன் வரையிலான இரண்டு கி.மீ., தொலைவில் நெடுஞ்சாலையின் நடுவே சிறிய பள்ளங்கள் ஏற்பட்டு வாகன ஓட்டிகளை பாதித்து வருகின்றன. திடீரென தென்படும் இக்குழிகளால் டூவிலரில் செல்லும் வாகன ஓட்டிகள் தடுமாறி விபத்திற்கு உள்ளாகி வருவதுடன் பின்னால் வருபவர்களும் மோதலுக்கு ஆளாகின்றனர்.இவ்வழியாக சென்றும்அதிகாரிகள் சரி செய்யாமல் வைத்துள்ளனர். . நெடுஞ்சாலை துறையினரின் மெத்தனத்தால்சாமானிய மக்கள் விபத்திற்கு உள்ளாகி வருகின்றனர் மாவட்ட நிர்வாகம் தீர்வு காணவேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
0
Leave a Reply