இண்டெல் நிறுவனத்தின் 529 ஊழியர்களை வேலை நீக்கம் அதிர்ச்சி அறிவிப்பு..!
உலகின் முன்னணி டெக் நிறுவனங்களில் ஒன்றான இன்டெல் நிறுவனம், ஜூலை15ஆம் தேதி529 ஊழியர்களை வேலை நீக்கம் செய்ய உள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இன்டெல் நிறுவனம் செலவை குறைக்கும் நடவடிக்கையை தொடங்கியுள்ள நிலையில், முதல் கட்டமாக 529 ஊழியர்களை வேலை நீக்கம் செய்ய இருப்பதாக அறிவித்துள்ளது. நிறுவனத்தின் சிக்கல்களை அகற்றுவது, செயல்திறனை வலுப்படுத்துவது, லாபத்தை நோக்கி நிறுவனத்தை கொண்டு செல்வது ஆகியவற்றிற்காக செலவுகளைக் குறைக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டிருப்பதாக இன்டெல் நிறுவனம் அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளது. இந்தவேலைநீக்கநடவடிக்கையால்சிப்தயாரிப்புவல்லுநர்கள், கிளவுட்மென்பொருள்வல்லுநர்கள், பொறியாளர்கள்உட்படசில முக்கியபதவிகள்காலியாகும்என்றும்கூறப்பட்டுவருகிறது. வேலை நீக்கம் செய்யப்படும் ஊழியர்களுக்கு60 நாள் நோட்டீஸ் அல்லது குறைந்த நான்கு வார நோட்டீஸ் வழங்கப்படும் என்றும், ஒன்பது வார ஊதியம் மற்றும் சலுகைகள் வழங்கப்படும் என்றும் இன்டெல் நிறுவனம் தெரிவித்துள்ளது.
0
Leave a Reply