ஊஞ்சல்
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, சிறு குழந்தைகளின் கைகளை பிடித்த படிதூக்கிசுழற்றும்வழக்கம்பெரியவர்களிடையே உண்டு. தொட்டிலில் குழந்தைகளை ஆட்டும் வழக்கமும் பழமையானது. குழந்தைகளுக்கு மரங்களில் ஏறி தொங்கி ஆடுவதும் ரொம்ப பிடிக்கும். ஊஞ்சல்களின் வரலாறு அறிய முடியாத அளவுக்கு பழமையானது. அதே அனுபவத்தை வழங்கும் வகையில் கயிறு கட்டி ஆடும் வழக்கமே, ஊஞ்சலாக உருவாகி இருக்கலாம்.
ஊஞ்சல் ஆடுவது சிறுவர்களுக்கும், பெரியவர்களுக்கும் ஏராளமான நன்மைகளை வழங்குகிறது.
ஊஞ்சல் ஆடுவதால் மனதில் உள்ள எதிர்மறை எண்ணங்கள் மறைந்து நேர்மறை எண்ணங்கள் உருவாகின்றன. இதனால் மன அழுத்தம் குறைகிறது.
குழந்தைகள் ஊஞ்சல் ஆடும்போது பெற்றோர் ,உடன் இருப்பதோடு மிதமான வேகத்தை பின்பற்ற வேண்டும்.
கணினியில் நீண்ட நேரம் பணி செய்பவர்கள் ஊஞ்சல் பயிற்சி செய்தால் முதுகுவலியும், கழுத்து வலியும் நீங்கும்.
0
Leave a Reply