விருதுநகர் வட்டாரப்பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித்திட்ட பணிகள் மற்றும் அரசு திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கள ஆய்வு மேற்கொண்டார்.
விருதுநகர் மாவட்டம், மீசலூர் ஊராட்சியில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித்திட்ட பணிகள் மற்றும் அரசு திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து (20.11.2025) மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S, அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.மீசலூர் ஊராட்சியில் அமைந்துள்ள நியாய விலைக்கடையில் பொருட்களின் இருப்பு மற்றும் அவற்றின் தரம் குறித்தும், பயன்பெறும் பயனாளிகளின் எண்ணிக்கை குறித்தும் ஆய்வு செய்தார். மேலும், பொருட்களின் வழங்கல் முறை குறித்து பயனாளிகளிடம் கேட்டறிந்தார்.
தொடர்ந்து, மீசலூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் விவசாயிகளுக்கு வழங்கப்படும் குறுகிய கால மற்றும் நடுத்தரக் கால பயிர்க்கடன் குறித்த விவரங்களையும், குறைந்தபட்ச ஆதரவு விலையில் கொள்முதல் செய்யப்பட்ட விளைபொருட்கள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்.பின், த.நா.சீனிவாசா அரசு மேல்நிலைப்பள்ளியினை நேரில் சென்று பார்வையிட்டு, அங்கு வழங்கப்படும் உணவு மற்றும் குடிநீர் ஆகியவற்றின் தரம் மற்றும் சுகாதாரத்தன்மை குறித்தும், அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகள் குறித்தும் ஆய்வு செய்தார். மேலும், பள்ளி மாணவர்களின் கற்றல் திறன் குறித்து மாணவர்களிடம் கேட்டறிந்தார்.இந்த ஆய்வின் போது வட்டாட்சியர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் இருந்தனர்.
0
Leave a Reply