விருதுநகர் மாவட்டத்தில் 15.05.2025 முதல் வருவாய்த்தீர்வாயம் (ஜமாபந்தி) துவங்க உள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தகவல்.
விருதுநகர் மாவட்டத்தில் 1434-ம் பசலிக்கான வருவாய்த் தீர்வாயம் (ஜமாபந்தி) 2025-ம் ஆண்டு மே 15-ந் தேதி முதல் மே 16-ந் தேதி வரை, மே 20-ந் தேதி முதல் மே 22-ந் தேதி வரை மற்றும் மே 27-ந் தேதி முதல் மே 28-ந் தேதி வரை உள்ள நாட்களில் சம்பந்தப்பட்ட வருவாய் வட்டாட்சியர் அலுவலகங்களில் நடத்தப்பட உள்ளது.அதன்படி, சிவகாசி வட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் 15.05.2025, 16.05.2025 17.05.2025, 21.05.2025 மற்றும் 22.05.2025 ஆகிய 5 தினங்களும்,
விருதுநகர் வட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் அவர்கள் தலைமையில் 15.05.2025, 16.05.2025, 20.05.2025 முதல் 23.05.2025 மற்றும் 27.05.2025 ஆகிய 7 தினங்களும்,
இராஜபாளையம் வட்டாட்சியர் அலுவலகத்தில் சிவகாசி சார் ஆட்சியர் அவர்கள் தலைமையில்15.05.2025, 16.05.2025, 20.05.2025 முதல் 22.05.2025 ஆகிய 5 தினங்களும்,
சாத்தூர் வட்டாச்சியர் அலுவலகத்தில் சாத்தூர் வருவாய் கோட்டாட்சியர் அவர்கள் தலைமையில், 15.05.2025, 16.05.2025, 20.05.2025 முதல் 22.05.2025 ஆகிய 5 தினங்களும்,
அருப்புக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் அவர்கள் தலைமையில், 15.05.2025, 16.05.2025, 20.05.2025 முதல் 23.05.2025 மற்றும் 27.05.2025 ஆகிய 7 தினங்களும்,
காரியாபட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் அவர்கள் தலைமையில்,
15.05.2025, 16.05.2025, 20.05.2025 முதல் 23.05.2025 ஆகிய 6 தினங்களும்,
வெம்பக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில், விருதுநகர் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக மண்டல மேலாளர் அவர்கள் தலைமையில்,15.05.2025, 16.05.2025, 20.05.2025 முதல் 22.05.2025 ஆகிய 5 நாட்களும்,
திருச்சுழி வட்டாட்சியர் அலுவலகத்தில் உதவி ஆணையர்(கலால்) அவர்கள் தலைமையில், 15.05.2025, 16.05.2025, 20.05.2025 முதல் 23.05.2025 மற்றும் 27.05.2025 முதல் 28.05.2025 ஆகிய 8 தினங்களும்,
திருவில்லிபுத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் சமூக பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியர் அவர்கள் தலைமையில், 15.05.2025, 16.05.2025 மற்றும் 20.05.2025 ஆகிய 3 தினங்களும்,
வத்திராயிருப்பு வட்டாட்சியர் அலுவலகத்தில், தாட்கோ மாவட்ட மேலாளர் அவர்கள் தலைமையில், 15.05.2025, 16.05.2025 மற்றும் 20.05.2025 ஆகிய 3 தினங்களும் நடைபெறவுள்ளது.
எனவே, வருவாய்த் தீர்வாயம் (ஜமாபந்தி) நடைபெறும் தினங்களில் தொடர்புடைய கிராம நில உடைமைதாரர்கள் நிலப்பதிவு சம்பந்தப்பட்ட மனுக்கள், பட்டா மாறுதல், நில ஒப்படை, நில நிர்வாகம் மற்றும் வருவாய்த்துறை தொடர்புடைய பல்வேறு கோரிக்கை தொடர்பான மனுக்களை ஜமாபந்தி அலுவலரிடம் பொதுமக்கள் நேரில் அளித்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.
0
Leave a Reply