25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >>


வெவ்வேறு விபத்துக்களில் பாம்பு கடித்து  உயிரிழந்த 2 நபர்களின் வாரிசுதாரர்களுக்கு  முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து  நிவாரணத்தொகைக்கான காசோலைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

வெவ்வேறு விபத்துக்களில் பாம்பு கடித்து உயிரிழந்த 2 நபர்களின் வாரிசுதாரர்களுக்கு முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து நிவாரணத்தொகைக்கான காசோலைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் (08.07.2025) பாம்பு கடித்து  உயிரிழந்த 2 நபர்களின் வாரிசுதாரர்களுக்கு  முதலமைச்சர் பொதுநிவாரணநிதியிலிருந்துமொத்தம்ரூ.2இலட்சம்மதிப்பிலானகாசோலைகளைமாவட்டஆட்சித்தலைவர்மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S.,  அவர்கள் வழங்கினார்.

அதன்படி, விருதுநகர் வட்டம், கே.உசிலம்பட்டி பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்த (லேட்) திரு.நாகராஜன் என்பவர் பாம்பு கடித்து உயிரிழந்ததால், வாரிசுதாரரான அவரது மனைவி திருமதி  ஜீவா  என்பவருக்கு  முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ1 இலட்சத்திற்கான காசோலையினையும்,திருவில்லிபுத்தூர் வட்டம், கூனங்குளம் புதுத்தெருவைச்  சேர்ந்த (லேட்)திரு.பேச்சியப்பன்  என்பவர் பாம்பு கடித்து உயிரிழந்ததால், அவரது வாரிசுதாரரான மனைவி திருமதி பேச்சியம்மாள் என்பவருக்கு,  முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ1 இலட்சத்திற்கான காசோலையினையும்,என மொத்தம் உயிரிழந்த 2 நபர்களின் வாரிதாரர்களுக்கு முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.2 இலட்சத்திற்கான காசோலைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News