சாத்தூர் நகராட்சியில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று ஆய்வு செய்தார்.
விருதுநகர் மாவட்டம், சாத்தூர் நகராட்சியில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் (29.07.2025) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து, அரசின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு அரசு திட்டப்பணிகள் மற்றும் நலத்திட்டங்களின் பயன்கள், கருத்துக்கள் குறித்து பயனாளிகளிடம் கலந்துரையாடினார்.அதன்படி, சாத்தூர் நகராட்சியில் புதிதாக பேருந்து நிலையம் அமையவுள்ள இடத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.அதனை தொடர்ந்து, சாத்தூர் நகராட்சி, மேலகாந்திநகர் தொடக்கப்பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டு, அங்கு மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவின் தரம் குறித்தும், உணவு தயாரிப்பதற்காக பயன்படுத்தப்படும் பொருட்களின் தரம் குறித்தும், தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு கற்றல், கற்பித்தல் நடைபெற்று வருவதையும் ஆய்வு செய்தார்.மேலும், சாத்தூர் நகராட்சியில், முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் மூலம் உணவு தயாரிக்க புதியதாக அமையவுள்ள சமையல் கூடத்தினை பார்வையிட்டு, அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு செய்தார்.
பின்னர், சாத்தூர் நகராட்சி அலுவலகத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு, பதிவேடுகள், கோப்புகள், பெறப்பட்டுள்ள மனுக்கள், திடக்கழிவு மேலாண்மை உள்ளிட்டவை குறித்து ஆய்வு மேற்கொண்டு, நிலுவையில் உள்ள மனுக்கள் மற்றும் பொதுமக்களிடமிருந்து பெறப்படும் மனுக்களை விரைந்து பரிசீலனை செய்து தீர்வு வழங்க தொடர்புடைய அரசு அலுவலர்களுக்கு அறிவுரை மற்றும் ஆலோசனைகளை வழங்கினார்.மேலும், சாத்தூர் நகராட்சியில் மின் மயானம் புதிதாக அமைக்கப்பட்டு வருவதை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.மேலும், இருக்கன்குடி அணையினை நேரில் சென்று பார்வையிட்டு, அணையின் கொள்ளளவு, தற்போதைய நீர் இருப்பு, பயன்பெறும் பாசன நிலங்கள், வரத்து கால்வாய்கள் உள்ளிட்டவை குறித்து கேட்டறிந்து ஆய்வு செய்தார்.பின்னர், சாத்தூர் இருக்கன்குடி செல்லும் வழியில் உள்ள ஆட்டுப்பண்ணையினை பார்வையிட்டு, அதன் செயல்பாடுகள், அங்கு ஆடுகள் வளர்த்தல் விதம் குறித்து கேட்டறிந்து, அங்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் மரக்கன்றுகளை நட்டு வைத்தார்.
மேலும், சாத்தூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தினை பார்வையிட்டு ஆய்வு செய்து, இலவச வீட்டுமனை பட்டா பெற்ற பயனாளிகள் கிராம கணக்கு பதிவேட்டில் சேர்க்க வேண்டி மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள் அவர்கள் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களிடம் நேரில் மனு அளித்ததன் பேரில், அவர்கள் கோரிக்கையினை பரிசீலனை செய்து 15 நாட்களுக்குள் இணைய வழியில் பட்டா பதிவேற்றம் செய்து, இ.குமாரலிங்காபுரம் கிராமத்தைச் சேர்ந்த 4 பயனாளிகளுக்கும், சூரங்குடி கிராமத்தைச் சேர்ந்த 1 பயனாளிக்கும் என 5 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா ஆணையினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.இந்த ஆய்வின் போது, அரசு திட்டங்கள் மற்றும் பயன்கள் உரிய பயனாளிகளுக்கு சென்றடைய அரசு அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அறிவுரை மற்றும் ஆலோசனைகளை வழங்கினார்.இந்த ஆய்வின் போது, சாத்தூர் வருவாய் கோட்டாட்சியர் திரு.கனகராஜ், சாத்தூர் வட்டாட்சியர், சாத்தூர் நகராட்சி ஆணையர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், உதவி பொறியாளர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
0
Leave a Reply