25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >>


வண்டல்மண்  தேவைப்படும்   விவசாயிகள்  குறைதீர்க்கும்  நாள் கூட்டத்தில்  இணையதளத்தில் பதிவு செய்த விவரங்களுடன் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என மாவட்ட ஆட்சித்தலைவர்  அவர்கள் தகவல்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

வண்டல்மண் தேவைப்படும் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் இணையதளத்தில் பதிவு செய்த விவரங்களுடன் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தகவல்.

வண்டல் மண்  விவசாய நிலங்களுக்கு  பயன்படுத்துவதால் மண்ணின்  ஊட்டச்சத்து  மேம்படுத்தப் படுகிறது.   வண்டல் மண்  விவசாய  நிலங்களிலுள்ள  நுண்ணுயிர்களான  மண் புழுக்கள்  இனப்பெருக்கத்தினை  அதிகரித்து  பயிர்களுக்கு  தேவையான  சத்துகளை வழங்குகிறது.    வண்டல் மண் விவசாய  நிலங்களுக்கு  பயன்படுத்துவதால் நீர் தேங்கும் திறனை அதிகரித்து காற்று ஊடுருவல் திறனை மேம்படுத்தி பயிரின் மகசூல் அதிகரிக்கப்படுகிறது.

                வண்டல்மண்  தேவைப்படும்  விவசாயிகள்  அரசாணை எண் 14 ல் வெளியிடப்பட்டுள்ள  பொதுப்பணித்துறை  மற்றும்  ஊரக  வளர்ச்சித்துறை  கட்டுப்பாட்டிலுள்ள  கண்மாய்களின்  விபரங்களை  கோட்டாட்சியர் அலுவலகம் மற்றும் மாவட்ட  ஆட்சியர்   அலுவலகத்தில் நடைபெறும்  விவசாயிகள்  குறைதீர்க்கும்  நாள்  கூட்டத்தில்  இணையதளத்தில் பதிவு செய்த விபரங்கள் மற்றும் தேவையான கண்மாய் பட்டியல் விபரங்களுடன் கலந்து கொள்ள  கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.    

                  இ-சேவை மையங்கள் மூலமாக இணையதளத்தில்  கண்மாய்களில் வண்டல் மண்  எடுப்பதற்கு  உரிய  ஆவணங்களான  பட்டா மற்றும்  ஆதார் எண்ணுடன்   பதிவு  செய்து,  அதற்கான  இரசீதினை பெற்று  விவசாயிகள் குறைதீர்க்கும்  நாள்  கூட்டத்தில்  கலந்து கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S,அவர்கள் தெரிவித்துள்ளார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News