25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >>


மாபெரும் நெகிழி கழிவு சேகரிக்கும் திட்டத்தினை  நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர்  அவர்கள் தொடங்கி வைத்தார்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

மாபெரும் நெகிழி கழிவு சேகரிக்கும் திட்டத்தினை நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் அவர்கள் தொடங்கி வைத்தார்.

விருதுநகர் கௌசிகா நதி பாலம் புதிய பேருந்து நிலைய அருகில் (25.01.2025) மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் இணைந்து மாபெரும் நெகிழி கழிவு சேகரிக்கும் திட்டத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S.,  அவர்கள் தலைமையில், விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஏ.ஆர்.ஆர்.சீனிவாசன் அவர்கள், சிவகாசி மாநகராட்சி மேயர் திருமதி சங்கீதா இன்பம் அவர்கள் ஆகியோர் முன்னிலையில்,  நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் திரு.தங்கம் தென்னரசு அவர்கள் துவக்கி வைத்தார்.பின்னர், நெகிழி பயன்பாட்டை தவிர்த்து, அதற்கு மாற்றாக துணிப்பைகளின் உபயோகிக்கும் பழக்கத்தை மக்களிடையே ஏற்படுத்தும் வகையில், மஞ்சப்பைகளை பொதுமக்களுக்கு வழங்கினார்.

தமிழக அரசு உத்தரவின்படி 2025 ஜனவரி முதல் டிசம்பர் வரை ஒவ்வொரு மாதமும் நான்காவது சனிக்கிழமை அன்று தமிழ்நாடு முழுவதும் உள்ள ஊராட்சி அமைப்புகள் மற்றும் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியம் இணைந்து  நெகிலியால் ஆன பொருட்களை நீர்நிலைகள், நகர்புற பகுதிகள், கிராம பகுதிகள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நெகிலியை அகற்றுவதற்கான மாபெரும் இயக்கம் துவங்கி வைக்கப்பட்டுள்ளது.குறிப்பாக ஒருமுறை பயன்படுத்தக்கூடிய நெகிலியை நாம் முற்றிலுமாக ஒழிக்க வேண்டும் என்று நம்முடைய அரசு உறுதி கொண்டிருக்கிறது. அதற்கு மாற்றாக மீண்டும் மஞ்சப்பை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இது ஒரு மக்கள் இயக்கமாக மாற்றிட வேண்டும். பல இடங்களிலே இத்தகைய உணவுப் பொருட்களை உபயோகப்படுத்தக்கூடிய பைகள், ஒரு முறை பயன்படுத்தக்கூடிய பைகள் சுற்றுச்சூழலுக்கு மாசு விளைவிப்பதோடு உடல் நலக்கத்திற்கும் பெரிய அளவில் தீங்கு விளைவிப்பதாக  உள்ளது.எனவே பிளாஸ்டிக் பொருட்களை தவிர்க்க  அனைவருக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்த கூடிய நிகழ்ச்சி இன்று தமிழகமெங்கும் பல்வேறு இடங்களில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.நம்முடைய விருதுநகர் மாவட்டத்தில் இன்றைக்கு தொடங்கி வைக்கப்பட்டுள்ளது என நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்தார்.இந்நிகழ்வில், மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர்(தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம்) திரு.ஹேமந்த் ஜோசன், விருதுநகர் நகர்மன்ற தலைவர் திரு.மாதவன்,  தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய அலுவலர்கள், நகராட்சி அலுவலர்கள், பணியாளர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News