25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >>


திருத்தங்கல் கிளை நூலகத்தில் பொது நூலகத்துறை சார்பில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள தமிழ் நூலகத்தை நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர்  அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

திருத்தங்கல் கிளை நூலகத்தில் பொது நூலகத்துறை சார்பில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள தமிழ் நூலகத்தை நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

விருதுநகர் மாவட்டம் சிவகாசி வட்டம் திருத்தங்கல் கிளை நூலகத்தில் பொது நூலகத்துறை சார்பில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள தமிழ் நூலகத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் தலைமையில், நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் திரு.தங்கம்தென்னரசு அவர்கள் (15.02.2025) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தமிழ்நாடு அரசு பொது நூலகத்துறையின் விருதுநகர் மாவட்ட நூலக ஆணைக்குழுவில கீழ் திருந்தங்கல் முழு நேர கிளை நூலகம் திருத்தங்கல் வடக்கு ரத வீதியில் செயல்பட்டு வருகிறது. இந்நூலகம் 1958 ஆம் ஆண்டு திறுக்கப்பட்டது. நூலகத்தில் 45,000 க்கு மேற்பட்ட நூல்கள் உள்ளது. மேலும் 8646 பேர் உறுப்பினராக உள்ளனர்.  இப்பகுதி பொது மக்களும், மாணவ மாணவிகளும் மற்றும் போட்டித்தேர்விற்கு தயாராகிவரும் இளைஞர்களும் இந்நூலகத்தை பெருமளவில் பயன்படுத்தி வருகின்றனர். இந்நூலகத்தில் பொது மக்கள் பயன்பாட்டிற்காக கணிப்பொறி வசதியும் இலவச வை-பை மற்றும் நகலெடுக்கும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

சொந்த கட்டிடத்தில் செயல்படும் இந்நூலகத்திற்கு மாநிலங்களுக்கான சிறப்பு நிதி உதவித்திட்டத்தின் கீழ் ரூ.22 இலட்சத்தில் கூடுதல் கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இதில் தமிழ் நூலகத்தில் இலக்கணம், இலக்கியம், இலக்கிய வரலாறு, மொழி வரளாறு, ஆராய்ச்சிக்கட்டுரைகள், திறனாய்வு நூல்கள், சங்க இலக்கிய நூல்கள், திருக்குள்ள தொடர்பான திறனாய்வு நூல்கள், தமிழ் அகராதிகள், காப்பியங்கள், பக்தி இலக்கியங்கள் போன்ற முற்றிலும் 10000 தமிழ் நூல்களைக் கொண்ட பிரத்தியேக தமிழ் நூலகமாக அமைக்கப்பட்டுள்ளது.

இந்த நூலகம் கல்லூரி மாணர்களுக்கும், பள்ளி மாணவர்களுக்கும், தமிழ் பற்றாளர்களுக்கும், தமிழ் ஆராய்ச்சியாளர்களுக்கும்,  தமிழ் அறிஞர்களுக்கும் மிகவும் பயன்படக்கூடிய தனித்துவமான நூலகமாக இருக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளதுஇந்நிகழ்ச்சியில், மாவட்ட நூலக அலுவலர் திரு.இரா.சுப்பிரமணியன், உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News