25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >>


மல்லாங்கிணறு பேரூராட்சியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில்  பொது சுகாதார அலகு கூடுதல் கட்டடம் கட்டுவதற்குநிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் அவர்கள் அடிக்கல் நாட்டி பணிகளை துவக்கி வைத்தார்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

மல்லாங்கிணறு பேரூராட்சியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பொது சுகாதார அலகு கூடுதல் கட்டடம் கட்டுவதற்குநிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் அவர்கள் அடிக்கல் நாட்டி பணிகளை துவக்கி வைத்தார்.

விருதுநகர் மாவட்டம், மல்லாங்கிணறு பேரூராட்சியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 15 ஆவது நிதி ஆணைய சுகாதார மானியம் 2025-2026 கீழ் ரூ.75 இலட்சம் மதிப்பில் பொது சுகாதார அலகு கூடுதல் கட்டடம் கட்டுவதற்கு மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S., அவர்கள் தலைமையில்,  நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் திரு.தங்கம் தென்னரசு அவர்கள் (11.09.2025) அடிக்கல் நாட்டி பணிகளை துவக்கி வைத்தார். தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையிலான அரசு மருத்துவ சேவைகள் கடைக்கோடி மக்களுக்கும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கில் செயலாற்றி வருகிறது. கடந்த நான்காண்டு ஆட்சியில் அரசு மருத்துவமனைகள் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களின் தரம் மற்றும் சேவைகள் மிகப்பெரிய  அளவில் முன்னேற்றம் கண்டுள்ளது. அந்த முன்னேற்றத்திற்கு மிகவும் உறுதுணையாக இருக்கும் உட்கட்டமைப்பு வசதிகளும் தொடர்ச்சியாக மேம்படுத்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில், மல்லாங்கிணறு பேரூராட்சியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 15 ஆவது நிதி ஆணைய சுகாதார மானியம் 2025-2026 கீழ் ரூ.75 இலட்சம் மதிப்பில் பொது சுகாதார அலகு கூடுதல் கட்டடம் கட்டுவதற்கு கட்டுவதற்கு இன்று அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.
இந்த புதிய கட்டடம் ஆய்வக அறை, மருந்து வழங்கும் அறை, மருத்துவர் அறை மற்றும் அடிப்படை வசதிகள் உள்ளிட்ட வசதிகளுடன் கட்டப்படவுள்ளது.இது போன்ற மக்களுக்கு தேவையான பல்வேறு வசதிகளையும், ஆரம்ப சுகாதார நிலையங்கள் தொடர்ச்சியாக மேம்படுத்துவதற்கான பணிகளையும்  தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தலைமையிலான அரசு தொடர்ந்து செயல்படுத்தும். எனவே, மருத்துவ சேவைகளை பொதுமக்கள் அனைவரும் பயன்படுத்தி கொள்ளுமாறு  அமைச்சர் அவர்கள் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், உதவி இயக்குநர்(பேரூராட்சிகள்) திரு.ந.மணிகண்டன், அருப்புக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் திரு.மாரிமுத்து, விருதுநகர் மாவட்ட சுகாதார அலுவலர் மரு.யசோதாமணி, செயல் அலுவலர் திரு.அன்பழகன், உதவி செயற்பொறியாளர் திரு.முத்து, உள்ளாட்சி பிரதிநிதிகள், மருத்துவப் பணியாளர்கள், பொதுப்பணித்துறை அலுவலர்கள், அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *