முன்னேற விழையும் மாவட்டம்(Aspirational District) தொடர்பாகநடைபெற்று வரும் பணிகள் குறித்து தொடர்புடைய அரசுத்துறை உயர் அலுவலர்களிடம்ஒன்றிய இணை அமைச்சர் அவர்கள் ஆய்வு
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் (17.02.2025) மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S, அவர்கள் முன்னிலையில் ஒன்றிய இணை அமைச்சர்(கார்ப்பரேட் விவகார அமைச்சகத்தின் சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள்) திரு.ஹர்ஷ் மல்ஹோத்ரா அவர்கள் தலைமையில், முன்னேற விழையும் மாவட்டம் தொடர்பாக நடைபெற்று வரும் பணிகள் குறித்து சம்பந்தப்பட்ட அரசுத்துறை உயர் அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.மத்திய அரசு நிதி ஆயோக் அமைப்பினால் கல்வி, பொது சுகாதாரம், வேளாண்மை, ஊட்டச்சத்து, குழந்தைகள் வளர்ச்சி, திறன் மேம்பாட்டு, உள்கட்டமைப்பு (அடிப்படை கட்டுமானம்), நிதி மேலாண்மை (அனைவருக்கும் வங்கி சேவை) ஆகியவற்றின் அடிப்படையில் இந்தியாவில் 112 மாவட்டங்கள் தேர்வு செய்யப்பட்டு, அம்மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு துறைகளையும் ஒருங்கிணைத்து முற்றிலும் வளர்ச்சியடைந்த மாவட்டமாக மாற்றுவது தான் இத்திட்டத்தின் நோக்கமாகும்.
விருதுநகர் மாவட்டத்தில் கல்வி, பொது சுகாதாரம், வேளாண்மை, ஊட்டச்சத்து, குழந்தைகள் வளர்ச்சி, திறன் வளர்ப்பு, அடிப்படை கட்டுமானம், நிதிநிலை சேர்ப்பு(அனைவருக்கும் வங்கி சேவை) ஆகிய துறைகளில் தனிக்கவனம் செலுத்தி அந்த துறைகளை முன்னேற்ற பாதையில் எடுத்து செல்வதற்கு அலுவலர்கள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், ஒன்றிய அரசினால் முன்னேற விழையும் மாவட்டங்களாக(யுளிசையவழையெட னுளைவசiஉவள) தேர்வு செய்யப்பட்டுள்ள மாவட்டங்களில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகள் குறித்து ஒன்றிய, மாநில அமைச்சர்கள் மற்றும் உயர் அலுவலர்கள் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு வருகிறார்கள்.
அதன் ஒரு பகுதியாக இன்று நடைபெற்ற ஆய்வு கூட்டத்தில், முன்னேற விழையும் மாவட்டங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள காரணிகள் மற்றும் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து கேட்டறிந்து, காரணிகளின் மீது தனிக்கவனம் செலுத்தி, இந்த காரணிகளின் தரத்தினை மேம்படுத்த தொடர்புடைய துறைத்தலைவர்களுக்கு மாண்புமிகு ஒன்றிய இணை அமைச்சர்(கார்ப்பரேட் விவகார அமைச்சகத்தின் சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள்) திரு.ஹர்ஷ் மல்ஹோத்ரா அவர்களால் அறிவுறுத்தப்பட்டது.
முன்னதாக விருதுநகர், திருவில்லிபுத்தூர், சிவகாசி ஊராட்சி ஒன்றியங்களில் நடைபெற்று வரும் பல்வேறு அரசு திட்டப்பணிகள் குறித்து நேரில் ஆய்வு மேற்கொண்டார்.இக்கூட்டத்தில் திட்ட இயக்குநர் (மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) மரு.தண்டபாணி, உதவி ஆட்சியர் (பயிற்சி) திரு.ஹிமான்சு மங்கள்,I A S, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திரு.இரா.மதன்குமார், இணை இயக்குநர் (மருத்துவப்பணிகள்) மரு.பாபுஜி, இணை இயக்குநர் (விவசாயம்) மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
0
Leave a Reply