சர்வதேச மகளிர் தினத்தினை முன்னிட்டு நடைபெற்ற தாயும் மகனும் இணைந்து ஓடும் நெடுந்தூர விழிப்புணர்வு ஓட்டப்போட்டியினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
விருதுநகர் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரியில் (08.03.2025) மாவட்ட நிர்வாகம் சார்பில், சர்வதேச மகளிர் தினத்தினை முன்னிட்டு நடைபெற்ற தாயும் மகனும் இணைந்து ஓடும் நெடுந்தூர விழிப்புணர்வு ஓட்டப்போட்டியினை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.இந்த மராத்தான் போட்டியானது காலை 6.30 மணியளவில் விருதுநகர் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி வளாகத்தில் உள்ள நுழைவுவாயில் இருந்து ஆரம்பித்து சூலக்கரை மேடு வரை சென்று மருத்துவ கல்லூரி வளாகத்தில் நிறைவு பெற்றது.
இந்த மராத்தான் போட்டியில் கோயம்புத்தூர் மாவட்டத்தை சேர்ந்த திருமதி வசந்தி மற்றும் அவரது மகன் செல்வன் மணிகண்டன் என்பவருக்கு முதல் பரிசாக ரூ.30,000/-மும், விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த திருமதி சங்கரேஸ்வரி மற்றும் அவரது மகன்கள் செல்வன்.குருராகவ் மற்றும் குருசரண் ஆகியோருக்கு இரண்டாம் பரிசாக ரூ.25,000/-மும், திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த திருமதி ரதி மற்றும் அவரது மகன் செல்வன் ஹரிஷ் என்பவருக்கு மூன்றாம் பரிசாக ரூ.20,000/-மும், விருதநகர் மாவட்டத்தை சேர்ந்த திருமதி கனகலெட்சுமி மற்றும் அவரது மகன் செல்வன் காமேஷ்குரு அவர்களுக்கு நான்காம் பரிசாக ரூ.15,000/-மும், மற்றும் விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த திருமதி ராஜேஸ்வரி மற்றும் அவரது மகன் தங்கேஸ்வரன் என்பவருக்கு ஐந்தாம் பரிசாக ரூ.10,000/-மும் என வெற்றிப்பெற்ற 5 தாய்மார்கள் மற்றும் அவரது மகன்களுக்கு பரிசுகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.இந்நிகழ்வின் போது, திட்ட அலுவலர் (மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) மரு.தண்டபாணி, மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் திரு.சே.குமரமணிமாறன், சாத்தூர் கோட்டாட்சியர் திரு.சிவகுமார், அனைத்து தாய்மார்கள் மற்றும் அவர்களது மகன்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
0
Leave a Reply