25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >>


மாநில அளவிலான சுற்றுலாத்துறை சம்பந்தப்பட்ட தொழில் புரிவோருக்கான விருது பெற விண்ணப்பிக்கின்ற  கால அளவு 30.09.2025 அன்று வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

மாநில அளவிலான சுற்றுலாத்துறை சம்பந்தப்பட்ட தொழில் புரிவோருக்கான விருது பெற விண்ணப்பிக்கின்ற  கால அளவு 30.09.2025 அன்று வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது

தமிழ்நாடு சுற்றுலா மேம்பாடு தொடர்பாக, சட்டப்பேரவையில்  சுற்றுலாத்துறை அமைச்சர் அவர்களால் 2021-2022 ஆம் ஆண்டிற்கான பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டு அதில் மாநில அளவிலான சுற்றுலாத்துறை சம்பந்தப்பட்ட தொழில் புரிவோருக்கு விருதுகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விருதுகள் உலக சுற்றுலாத்தினத்தன்று வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.அதன்படி சுற்றுலா பயண முகவர்கள், விமான நிறுவனங்கள் தங்கும் விடுதிகள் உணவகங்கள், சுற்றுலா வழிகாட்டிகள் மற்றும் சுற்றுலா சார்ந்த தொழில் நிறுவனங்களுக்கு 2025ம் ஆண்டிற்கான மொத்தம் 45 விருதுகள் 17 வகைப்பாடுகளில் வழங்கப்படவுள்ளது.

விருது வழங்கப்படும் வகைப்பாடுகள், சிறந்த உள்வரும் பயண முகவர், சிறந்த உள்நாட்டு பயண முகவர், சிறந்த பயண பங்குதாரர், சிறந்த விமான நிறுவன பங்குதாரர், சிறந்த தங்கும் விடுதி, சிறந்த உணவகம், சிறந்த (Niche) சுற்றுலாத்தலம், சிறந்த சாகச சுற்றுலா மற்றும் கேம்பிங் சைட் அமைப்பாளர்கள், சிறந்த (MICE) சுற்றுலா அமைப்பாளர்கள், சிறந்த சமூக ஊடகவியலாளர் (Special Media Influencer), சிறந்த சுற்றுலா வழிகாட்டி, சிறந்த சுற்றுலா விளம்பரங்கள், சிறந்த சுற்றுலா மேம்பாட்டு வெளியீட்டுகள், சிறந்த சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் சார்ந்த கல்வி நிறுவனங்கள் மேற்கண்ட நிறுவனங்களிமிருந்து விருதுநகர் மாவட்டத்தில்  உள்ள சுற்றுலா சார்ந்த தொழில்முனைவோர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மேலும், விண்ணப்பங்களை www.tntourismawardscom என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் இணையவழி மூலமாக விண்ணப்பிக்க 30.09.2025 வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.மேலும் கூடுதல் விவரங்களுக்கு சுற்றுலா அலுவலர் (மு.கூ.பொ) விருதுநகர் அவர்களை 73977-15688 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் மாவட்ட ஆட்சித் தலைவர்  மரு.என்.ஓ.சுகபுத்ரா.,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News