25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையத்தில்ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு >> இராஜபாளையத்தில் பெய்து வரும் மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி >> காலை உணவுத் திட்டத்திற்கு அரசு நிதி ஒதுக்காமல், ஆசிரியர்களை திட்டப் பணிக்கான வேலைகளை , செய்யக் கோரி துன்புறுத்துவதாக ஆசிரியர் கூட்டணி குற்றச்சாட்டு. >> சுற்றுச்சூழலை காக்கும் பணியில் பரியாவரன், சாயி பசுமை இயக்கம் >> இராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைஅடிவார பகுதியில் யானைகள் நடமாட்டம் >> ரோட்டரி கிளப் ஆப் இராஜபாளையம் சென்ட்ரல் கிளப் >> ஆதி திராவிடர் பள்ளியில் படித்து ஐ.ஐ.டி.யில் சேர்ந்த மாணவன். >> சிறந்த கல்லூரியாக தேர்வு பெற்ற ராம்கோ இன்ஜினியரிங் கல்லூரி. >> ஜூவல் ஒன்,தங்கம் வைரம் பிளாட்டினம் வெள்ளி,வைர நகைகளின் கண்காட்சி மற்றும் விற்பனை >> குழந்தை தொழிலாளர்கள் எதிர்ப்பு தினம்.-JUNE-12 >>


தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை விற்பனை செய்வது மற்றும் இருப்பு வைப்பது  குறித்து மாவட்டம் முழுவதும் தொடர்ந்து ஆய்வு செய்யப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை விற்பனை செய்வது மற்றும் இருப்பு வைப்பது குறித்து மாவட்டம் முழுவதும் தொடர்ந்து ஆய்வு செய்யப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது

தமிழ்நாடு அரசின் போதைப் பொருட்கள் மற்றும் தடை செய்யப்பட்ட  புகையிலை பொருட்கள் தீவிர ஒழிப்புத் திட்டத்தின்படி, உணவு பாதுகாப்பு துறை மற்றும் காவல் துறையினரும் இணைந்த 7 குழுக்கள் அமைக்கப்பட்டு, பள்ளி, கல்லூரிகள் அருகாமையில் உள்ள கடைகளிலும் மற்றும் இதர பகுதிகளில் உள்ள கடைகளிலும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள்  விற்பனை செய்யப்படுகிறதா என ஆய்வுகள்  மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கடந்த  01-01-2024 முதல்  29-06-2024 முடிய உணவு பாதுகாப்பு துறை மற்றும் காவல் துறையினரும்  குழுவாக இணைந்து 448 முறை தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் உள்ளதா என சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. அதில், தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக கண்டறியப்பட்ட 178 கடைகள்  மற்றும் 13 வாகனங்களில்  850 கிலோ 500 கிராம் எடையிலான புகையிலை பொருட்கள் கைப்பற்றப்பட்டன. இது தொடர்பாக 178 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டன. மேலும், 178 கடைகள் மற்றும் 13 வாகனங்களுக்கும்;;  ரூ.42,60,000/- (ரூபாய் நாற்பத்து இரண்டு இலட்சத்து அறுபதாயிரம்)  அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.   கடந்த 30-06-2024 முதல் 06-07-2024 முடிய ஒரு வாரத்தில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளும், காவல் துறையினரும்  இணைந்து  மேற்கொள்ளப்பட்ட 21 குழு ஆய்வுகளில்        14 கடைகள் மற்றும் 1 வாகனத்தில்; 39 கிலோ 282 கிராம் எடையுள்ள புகையிலை பொருட்கள் கைப்பற்றப்பட்டன. இது தொடர்பாக 14 கடைகள் சீல் வைக்கப்பட்டன. 14 கடைகள் மற்றும் 1 வாகனத்திற்கு ரூ.3,75000/- (ரூபாய் மூன்று இலட்சத்து எழுபத்தைந்தாயிரம்) அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
          
 முதன் முறையாக தடை செய்யப்பட்ட புகையிலை விற்பது கண்டுபிடிக்கப்பட்டால்  ரூ.25 ஆயிரம் அபராதம், 15 நாட்களுக்கு கடை மூடி சீல் வைக்கப்படும். 2-வது முறையாக  தவறு செய்தால் ரூ.50 ஆயிரம் அபராதம் ஒரு மாதம் வரை  கடை மூடி சீல் வைக்கப்படும் .  3வது முறையும் தவறு செய்தால்  ரூ.1லட்சம் அபராதம், மூன்று மாதங்களுக்கு கடை மூடி சீல் வைக்கப்படும். இம்மாவட்டம் முழுவதும் தொடர்ந்து ஆய்வு செய்யப்பட்டு, தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை விற்பனை செய்வது மற்றும் இருப்பு  வைப்பது  கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News