25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >>


கர்வால் கமலேஷ்வர் மகாதேவ் என்னும் சிவன் கோயில்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

கர்வால் கமலேஷ்வர் மகாதேவ் என்னும் சிவன் கோயில்.

உத்தர்கண்ட் மாநிலம் கர்வால் பகுதியில் உள்ளது கமலேஷ்வர் மகாதேவ் என்னும் சிவன் கோயில்.இங்கு கார்த்திகை மாத சதுர்த்தசியன்று இரவில் விளக்கை கையில் ஏந்தியபடி வழிபட்டால் குழந்தைப்பேறு கிடைக்கும். அசுரர்களை அழிக்க மகாவிஷ்ணுவிற்கு சுதர்சன சக்கரம் தேவைப்பட்டது.

அதற்காக இங்கு தவமிருந்து சிவபெருமானை பூஜித்தார். அப்போது ஆயிரம் தாமரை மலர்களால் சிவனுக்கு அர்ச்சனை செய்ய தயாரானார். ஆனால் எதிர்பாராத விதமாக ,அதில் ஒரு மலர் காணாமல் போனது.உடனே தாமரை போன்ற தன் கண்ணையே சிவனுக்கு சமர்ப்பிக்கலாம் என பிடுங்க முயன்றார். அப்போது, 'உம் பக்தியை சோதிக்கவே இப்படி செய்தோம்' என அசரீரி கேட்டது.

சிவனின் திருவிளையாடலை எண்ணி கண்ணீர் சிந்திய மகாவிஷ்ணுவின் முன் சுதர்சன சக்கரம் தோன்றியது. அதைப் பெற்றுக் கொண்ட மகாவிஷ்ணு போரில் அசுரர்களை அழித்தார். தாமரை (கமலம்) மலரைக் கொண்டு வழிபட்டதால் 'கமலேஷ்வரர்' என சுவாமிக்கு பெயர் ஏற்பட்டது. இமயமலையில் உள்ள ஐந்து மகேஷ்வர் பீடங்களில் இதுவும் ஒன்றாகும்.

பார்வதியை சிவன் திருமணம் செய்த நாளான மகாசிவராத்திரி இங்கு முக்கிய விழா. இந்நாளில் விரதம் இருந்து சுவாமிக்கு அபிஷேகமும் பழ நைவேத்யமும் செய்கின்றனர்.வசந்த பஞ்சமியை ஒட்டி வரும் அச்ரஸ் சப்தமியும் இங்கு சிறப்பாக கொண்டாடப்படுகிறது.அன்றுகமலேஷ்வரருக்கு 52 வகைஉணவுகள்நைவேத்யம்செய்யப்படுகிறது.சரஸ்வதி, கங்கை, அன்னபூரணிக்கு தனி சன்னதிகள் உள்ளன.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News