தமிழர்களின் தனிச்சிறப்பு!
நவதானியங்கள் ஒன்பது என நிர்மானித்த தமிழன்.
நெல், கோதுமை, துவரை, எள்,உளுந்து, பாசிப்பயறு, கொண்டைக்கடலை, மொச்சை , கொள்ளு
திசைகளை எட்டாகப் பிரித்தான்....
கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு (முக்கிய திசைகள்) மற்றும் வடகிழக்கு, வடமேற்கு, தென்கிழக்கு, தென்மேற்கு (மூலைத் திசைகள்) ஆகும்.
இசையை ஏழாகக் கொடுத்தான்...
ச ரி க ம ப த நி
சுவையை (அறுசுவை) ஆறாக பிரித்தான்.
இனிப்பு, புளிப்பு, உவர்ப்பு (உப்பு), கார்ப்பு (உறைப்பு), கசப்பு, மற்றும் துவர்ப்பு ஆகும்
நிலத்தை ஐந்தாக பிரித்தான்...
குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்று ஐந்தாகப் பிரிக்கப்படுகிறது.
காற்றை நான்காக பிரித்தான்...
தென்றல் | வாடை | கோடை/கொண்டல்
மொழியை மூன்றாக பிரித்தான்...
இயல் | இசை | நாடகம்
வாழ்க்கையை இரண்டாக வகுத்தான்... அகம் ,புறம்
ஒழுக்கத்தை மட்டும் ஒன்றாக வைத்தான்....
அதை... உயிரினும் மேலாக வைத்தான்.....
0
Leave a Reply