25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >>


முதலமைச்சரின் தாயுமானவர்' திட்டத்தின் கீழ்  அமைச்சர் அவர்கள் வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் இல்லத்திற்கே நேரில் சென்று குடிமைப் பொருட்களை வழங்கி திட்டத்தினை தொடங்கி வைத்தனர்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

முதலமைச்சரின் தாயுமானவர்' திட்டத்தின் கீழ் அமைச்சர் அவர்கள் வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் இல்லத்திற்கே நேரில் சென்று குடிமைப் பொருட்களை வழங்கி திட்டத்தினை தொடங்கி வைத்தனர்.

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் (12.08.2025) வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் இல்லத்திற்கே சென்று குடிமைப் பொருட்களை வழங்கும் 'முதலமைச்சரின் தாயுமானவர்' திட்டத்தை சென்னையில் தொடங்கி  வைத்தார்.அதனைத் தொடர்ந்து, விருதுநகர் மாவட்டத்தில் அருப்புக்கோட்டை நகராட்சி பகுதிக்குட்பட்ட சின்ன புளியம்பட்டி, காந்தி மைதானம் மற்றும் நேரு மைதானம் பகுதிகளில் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தலைமையில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் திரு.கே.கே.எஸ்.எஸ்.ராமச்சந்திரன் அவர்கள் வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் இல்லத்திற்கே நேரில் சென்று குடிமைப் பொருட்களை வழங்கினார்.

மேலும், நரிக்குடி ஊராட்சி ஒன்றியம், அ.முக்குளம் மற்றும் எழுவனி பகுதிகளில் மாவட்ட வருவாய் அலுவலர் திரு.இரா.ராஜேந்திரன் அவர்கள் தலைமையில், மாண்புமிகு நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் திரு.தங்கம் தென்னரசு அவர்கள் வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் இல்லத்திற்கே நேரில்சென்றுகுடிமைப்பொருட்களைவழங்கினார்.தமிழ்நாட்டில் பல்வேறு சேவைகளை மக்களின் வீடுதேடிச் சென்றைடையச் செய்யும் தமிழ்நாடு அரசின் உயரிய எண்ணத்தின் அடுத்த கட்டமாக, மாநிலத்தில் உள்ள வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத் திறனாளி குடும்ப அட்டைதாரர்களின் நலனை கருத்தில் கொண்டு, அவர்களின் உணவு பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் அவர்களின் இல்லத்திற்கே சென்று அரிசி, சர்க்கரை உள்ளிட்ட ரேசன் பொருட்களை விநியோகம் செய்யும் முதலமைச்சரின் “தாயுமானவர் திட்டம்"  தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களால் இன்று சென்னையில் தொடங்கி வைக்கப்பட்டது.

இத்திட்டத்தின் வாயிலாக 34,809 நியாயவிலைக் கடைகளை சேர்ந்த 70 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்களைக் கொண்ட 15,81,364 குடும்ப அட்டைகளில் உள்ள 20,42,657 பயனாளர்களுக்கும் 91,969 குடும்ப அட்டைகளில் உள்ள 1,27,797 மாற்றுத்திறனாளிகளுக்கும் ஆக மொத்தம் 16,73,333 குடும்ப அட்டைகளில் உள்ள 21,70,454 பயனாளர்களுக்கு அவர்தம் இல்லங்களிலே குடிமைப்பொருட்கள் விநியோகம் செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது.ஒவ்வொரு மாதமும் இரண்டாவது சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் இத்திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. தகுதியுள்ள குடும்ப அட்டைகள் மற்றும் பயனாளர்கள் விபரம் உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறையிடமிருந்து பெறப்பட்டு கள அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. மின்னனு எடை தராசு, e-PoS  இயந்திரம் உள்ளிட்ட உபகரணங்களுடன் மூடிய வாகனங்களில் குடிமைப்பொருட்கள் பாதுகாப்பாக தகுதியுள்ள பயனாளர்களின் இல்லத்திற்கே சென்று நியாயவிலைக் கடை விற்பனையாளர்கள் விற்பனை செய்ய தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் வாயிலாக விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 1070 நியாய விலைக்டைகளில் கூட்டுறவுத் துறை மூலம் 46,808 குடும்ப அட்டைகளில் உள்ள பயனாளர்களுக்கும், மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூலம் 230 குடும்ப அட்டைகளில் உள்ள பயனாளர்களுக்கும், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மூலம் 2,678 குடும்ப அட்டைகளில் உள்ள பயனாளர்களுக்கும் என மொத்தம் 49,716 குடும்ப அட்டைகளில் உள்ள 70 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு 822 வாகனங்கள் மூலம் அவரவர் இல்லங்களிலேயே குடிமைப் பொருட்களை விநியோகம் செய்யப்படவுள்ளது.

அதன்படி, அருப்புக்கோட்டை நகராட்சி பகுதிக்குட்பட்ட சின்ன புளியம்பட்டி, காந்தி மைதானம் மற்றும் நேரு மைதானம் பகுதிகளில் உள்ள நியாய விலைக்கடைகள் மூலம் பயன்பெறும் 227 குடும்ப அட்டைகளின் பயனாளிகளுக்கு முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தின் கீழ் வீடுதேடி குடிமைப்பொருட்களை  வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் திரு.கே.கே.எஸ்.எஸ்.ராமச்சந்திரன் அவர்கள் வழங்கினார்.மேலும், நரிக்குடி ஊராட்சி ஒன்றியம், அ.முக்குளம் பகுதி நியாயவிலைக் கடையில் உள்ள 598 குடும்ப அட்டைகளில் 40 குடும்ப அட்டைகளுக்கும், எழுவனி பகுதி நியாயவிலைக் கடையில் உள்ள 246 குடும்ப அட்டைகளில் 14 குடும்ப அட்டைகளுக்கும் என மொத்தம் 54 குடும்ப அட்டைகளின் பயனாளிகளுக்கு முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தின் கீழ் வீடுதேடி குடிமைப்பொருட்களை  நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் திரு.தங்கம் தென்னரசு அவர்கள் வழங்கினார்.மேலும், மாவட்டம் முழுவதும் இத்திட்டத்தின் மூலம் அனைத்து வட்டங்களிலும் உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் இல்லத்திற்கே வீடுதேடி குடிமைப்பொருட்களை வழங்கினார்கள்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News