விருதுநகர் மாவட்டம் மணல் மற்றும் இதர கனிமங்கள் வெட்டி எடுப்பது மற்றும் எடுத்துச்செல்வது, அதைத் தடுக்க முற்படும் அரசு அலுவலர்களை அச்சுறுத்துவது போன்ற குற்றங்களில் ஈடுபடும் நபர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டம் கீழ் கைது
விருதுநகர் மாவட்டம் மணல் மற்றும் இதர கனிமங்கள் வெட்டி எடுப்பது மற்றும் எடுத்துச்செல்வது, அதைத் தடுக்க முற்படும் அரசு அலுவலர்களை அச்சுறுத்துவது போன்ற குற்றங்களில் ஈடுபடும் நபர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டம் உள்ளிட்ட குற்றவியல் சட்டங்கள் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார்கள் என மாவட்ட ஆட்சித்தலைவர்; முனைவர் வீ.ப.ஜெயசீலன்I.A.S., அவர்கள் எச்சரிக்கை
விருதுநகர் மாவட்டம், சிவகாசி வட்டம், ஈஞ்சார் கிராம எல்லைக்குட்பட்ட சிவகாசி - ஸ்ரீவில்லிபுத்தூர் சாலையில் கடந்த 22.01.2025 அன்று உரிய அனுப்புகைச் சீட்டின்றி கனிமம் ஏற்றி வந்த TN 95 D 8988 என்ற பதிவெண் கொண்ட டிராக்டரானது சிவகாசி சார் ஆட்சியர் அவர்களால் கைப்பற்றப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டு, மல்லி காவல் நிலையத்தில் வழக்கு எண்: 19/2025 என பதிவு செய்யப்பட்டு, சம்பந்தபட்ட கனிம திருட்டில் ஈடுபட்ட நபர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
மேலும், சாத்தூர் வட்டம், இ.குமாரலிங்கபுரம் கிராமம், பெரியகுளம்; கண்மாயில் விவசாய பயன்பாட்டிற்கு வண்டல் மண் அள்ளிக் கொள்ள அனுமதி அளிக்கப்பட்ட ஆணையினை முறைகேடாக பயன்படுத்தி கிராவல் மண் அள்ளிக்கொண்டிருந்த TN 67 AF 3867, TN 79 M 4275, TN 67 AF 0462, TN 58 AZ 1042, TN 95 C 5625, TN 95 C 1924, TN 95 D 5247 ஆகிய பதிவெண்கள் கொண்ட டிப்பர் லாரிகளும், ஒரு கிட்டாச்சி இயந்திரம், TN 84 C 1869 மற்றும் TN 67 BF 4314 ஆகிய பதிவெண்கள் கொண்ட JCB இயந்திரங்களும் சாத்தூர் வருவாய் கோட்டாட்சியர் மற்றும் சாத்தூர் வட்டாட்சியர் அவர்களால் பறிமுதல் செய்யப்பட்டு, வச்சக்காரப்பட்டி காவல் நிலையத்தில் வழக்கு எண்: 45/2025 என பதிவு செய்யப்பட்டு, சம்பந்தபட்ட கனிம திருட்டில் ஈடுபட்ட நபர்கள் அரசு அலுவலர்களை பணி செய்ய விடாமல் தடுத்து தப்பிச்சென்ற நிலையில் கைது செய்ய காவல்துறை தரப்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
சட்ட விரோதமாக கனிமங்கள் வெட்டி எடுப்பது மற்றும் எடுத்துச்செல்வது சுரங்கங்களும் கனிமங்களும் (மேம்படுத்துதல் மற்றும் ஒழுங்குபடுத்துதல் சட்டம் 1957 பிரிவு 21(1)-ன்படி தண்டனைக்குறிய குற்றமாகும். மேலும், இச்செயல்கள் பாரதிய நியாய சன்ஹிதா 2023 பிரிவு 303(2)-ன்படி சம்பந்தப்பட்ட காவல் நிலையம் மூலம் வழக்கு பதிவு செய்யப்படும். மணல் மற்றும் இதர கனிமங்கள் வெட்டி எடுப்பது மற்றும் எடுத்துச்செல்வது, அதைத் தடுக்க முற்படும் அரசு அலுவலர்களை அச்சுறுத்துவது போன்ற குற்றங்களில் ஈடுபடும் நபர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டம் உள்ளிட்ட குற்றவியல் சட்டங்கள் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார்கள் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I.A.S.., அவர்கள் தெரிவித்துள்ளார்.
0
Leave a Reply