கோதுமை மாவு வெங்காய சமோசா.
தேவையான பொருட்கள்-
2 கப் கோதுமை மாவு,2கப்நறுக்கிய வெங்காயம்,1டேபிள்ஸ்பூன் மிளகாய் தூள்,ஒரு சிட்டிகை சமையல் சோடா,தேவையான அளவு உப்பு,1டீஸ்பூன் எலுமிச்சை சாறு, பொரிப்பதற்கு எண்ணெய்.
செய்முறை -
ஒரு அகலமான பாத்திரத்தில் தேவையான அளவு கோதுமை மாவு, உப்பு, எண்ணெய், நீர் சேர்த்து, சப்பாத்தி மாவை விட கெட்டியாக பிசைந்து ஊற வைக்கவும். வெங்காயத்தை நீளவாக்கிலும் கறிவேப்பிலை கொத்தமல்லி, காரத்திற்கு சிறிதளவு மிளகாய் தூள் சேர்த்து பச்சை வாசம் போகும் வரை வதக்கி, மாவை சப்பாத்தி போல கல்லில் தேய்த்து வெங்காய கலவையை உள்ளே வைத்து, சமோசா போல மடித்து கட்செய்து, வாணலியில் எண்ணெய் ஊற்றி மடித்து வைத்த சமோசாவை போட்டு பொன்னிறமாக எடுத்தால் சாப்பிட சுவையாக இருக்கும்.
0
Leave a Reply