சுரைக்காய் அடை தோசை .
தேவையான பொருட்கள்
1 கப் இட்லி அரிசி,2 டேபிள்ஸ்பூன் உளுந்தம் பருப்பு, 2டேபிள்ஸ்பூன் கடலைப் பருப்பு, 2 டேபிள்ஸ்பூன் துவரம் பருப்பு, 2 மிளகாய் வற்றல்,
1 சிறிய துண்டு இஞ்சி,1கப் நறுக்கிய சுரைக்காய்,1/2 டீஸ்பூன் சீரகம்,
1/2 டீஸ்பூன் பெருஞ்சீரகம்,1/2 டீஸ்பூன் பெருங்காயத்தூள்,
தேவையான அளவு உப்பு, தேவையான அளவு எண்ணெய்
செய்முறை
ஒரு பாத்திரத்தில் அரிசி, உளுந்து, துவரம் பருப்பு சேர்க்கவும்.பின்பு கடலைப்பருப்பு, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி 4 மணி நேரம் ஊற வைக்கவும்.
அரிசி பருப்பு வகைகளை கழுவி இதனுடன் மிளகாய் வற்றல், இஞ்சி துண்டு மற்றும் சுரைக்காய் சேர்க்கவும்.
இதனுடன் சீரகம், பெருஞ்சீரகம் மற்றும் பெருங்காயத்தூள் சேர்க்கவும்.
பின்பு மிக்ஸி ஜாரில் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து அரைத்து தேவையான அளவு உப்பு சேர்த்து கலக்கி 2 மணி நேரம் வைக்கவும்.
தோசைக்கல்லை சூடாக்கி ஒரு கரண்டி மாவை ஊற்றி தோசை வார்க்கவும்.
தேவையான அளவு எண்ணெய் தெளித்து இரண்டு பக்கமும் வேக வைத்து எடுக்கவும்.
0
Leave a Reply