25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


செரிமான மண்டலத்தை தூண்டக் கூடிய சாத்துக்குடி.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

செரிமான மண்டலத்தை தூண்டக் கூடிய சாத்துக்குடி.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் உறவினரை பார்க்கச் செல்லும் போது, நாம் வாங்கிச் செல்லும் பழங்களில் சாத்துக்குடிக்கு தான் முதலிடம். அந்த அளவுக்கு ஊட்டச் சத்துக்களை கொண்டது.

சாத்துக்குடி.செரிமான மண்டலத்தை தூண்டக் கூடிய, ,'பிளாவனாய்டு' என்றவேதிப்பொருள் இந்த பழத்தில் அதிக அளவில் உள்ளது.இதனால், வயிறு மற்றும்செரிமானக் குறைபாடுகள் உள்ளவர்களுக்கு, சாத்துக்குடி சிறந்தது.

வயிற்றுப்போக்கை கட்டுப்படுத்தும் ஆற்றலும், சாத்துக்குடிக்கு உண்டு. சாத்துக்குடியில், வைட்டமின்,'சி' நிறைவாக உள்ளதால், அதை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், அது உடலின் ஒட்டுமொத்த செயல் திறனையும் மேம்படுத்தும். ரத்த ஓட்டம் சீராகும், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

சாத்துக்குடியில் உள்ள லெமனாய்டஸ்' என்ற வேதிப்பொருள், பல்வேறு வகையான புற்றுநோய் செல்களுக்கு எதிராக செயல்பட்டு, புற்றுநோய் வராமல் நம் உடலை காப்பாற்றுகிறது. உடல் எடையை குறைக்க நினைப்பவர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதம்.

வெதுவெதுப்பான நீரில், சாத்துக்குடி சாறு மற்றும் தேன் கலந்து சாப்பிட்டு வர, உடல் எடை நிச்சயமாக குறைந்து விடும்.கொழுப்பை குறைப்பதுடன், ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்கவும் சாத்துக்குடி சிறந்தது.

சாத்துக்குடியில் உள்ள, வைட்டமின்,'சி' சத்தானது உடலில் உள்ள நச்சுகளை வெளியேற்றி, நம் சருமத்துக்கு இயற்கை பொலிவைத் தருகிறது. தோல் சுருக்கம் போன்ற சரும பாதிப்புகளிலிருந்து நம்மை பாதுகாக்கிறது.சிறுநீரக பாதிப்பு உள்ளோர், சாத்துக்குடி சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News