கருப்பு புள்ளி விழுந்த வாழைப்பழம் சாப்பிட்டால்...
வாழைப்பழம்நன்குபழுத்துதோலில்கருப்புஅல்லதுபழுப்புநிறமாற்றம்அடைந்தபழங்களில்தான்சத்துக்கள்கொட்டிகிடைக்கின்றன.வாழைப்பழத்தில் ரிப்டோபின் அதிகளவில் இருக்கிறது. இது நாள்பட மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களால் இயற்கையான முறையில் தேவையான அளவு செரடோனினை சுரக்க வைக்க முடியாது. கருப்பு புள்ளியுள்ள வாழைப்பழம் உண்பதன் மூலம் ரிப்டோபின், செரடோனினாக மாற்றப்படுகிறது. இதனால் மன அழுத்தம் குறைகிறது.
வாழைப்பழத்தில் பிராக்டோஸ், குளுக்கோஸ், சுக்ரோஸ் என மூன்றின் கலவை அதிகமாக இருக்கின்றது. இது உடலுக்கு தேவையான சக்தியை முழுமையாக அளிக்கின்றது. மேலும் உடலின் வளர்சிதை மாற்றம் சீராக்கவும் உதவுகிறது.தினமும் 2 புள்ளி விழுந்த வாழைப்பழம் சாப்பிட்டால் மூளையின் நலன் காக்கப்படுகிறது. இதில் உள்ள பொட்டாசியம் செல்லுலார் செயல்பாட்டை சீராக்குகிறது.
ரொம்ப பழுத்த வாழைப்பழம் உண்பதால் இதய ஆரோக்கியம் மேம்படும். உங்களுக்கு இதயத்தில் அடிக்கடி வலி ஏற்பட்டால், பழுத்த வாழைப்பழங்களை உங்கள் உணவில் சேர்க்க வேண்டும். இவை கொலஸ்ட்ராலைக் கூட கட்டுப்படுத்தும் பண்புகளைக் கொண்டுள்ளன. இதனால் இருதய நோய்களின் அபாயம் குறையும். தசைவலி பிரச்சனை இருந்தால், நன்கு பழுத்த வாழைப்பழத்தை சாப்பிட வேண்டும்.
பழுத்த வாழைப்பழத்தில் பொட்டாசியம் அதிகம் இருப்பதால் வலியிலிருந்து நிவாரணம் பெற அவற்றைப் பயன்படுத்தலாம். பழுத்த மஞ்சள் வாழைப்பழத்தில் உள்ள கரும்புள்ளிகள், புற்றுநோய் கட்டிகளை அழிக்கும் ஒரு பொருளான ட்யூமர் நெக்ரோசிஸ் ஃபேக்டர்(TNF) அதிக அளவில் இருப்பதை குறிக்கிறது.
பழுத்த வாழைப்பழங்கள் மலமிளக்கியாகவும் செயல்படும். மலச்சிக்கல் இருப்பவர்கள் வாழைப்பழம் உண்ணலாம். ஆனால் வாழைப்பழமும் பாலும் எடையை கூட்டி விடும் என்பதால் எடை குறைப்பு செய்பவர்கள் கவனமாக எடுத்து கொள்ளுங்கள். சர்க்கரை நோயாளிகள் மருத்துவர் பரிந்துரையின் பேரில் உண்ணலாம்.
0
Leave a Reply