ராஜபாளையத்தில் புதுப்பிக்கப்பட்டபழைய பஸ் ஸ்டாண்ட் திறப்பு.
ராஜபாளையம் நகராட்சியில் 2.90 கோடி மதிப்பில் புதுப்பிக்கப்பட்ட பழைய பஸ் ஸ்டாண்ட் திறப்பு விழா நடந்தது.1969ல் கட்டப்பட்டு பழுதடைந்த நிலையில் காணப்பட்ட பஸ் ஸ்டாண்ட் புதுப்பிக்கும் பணி 2023ல் தொடங்கப்பட்டது. 23 கடைகள், 2 உணவகங்கள், போலீஸ் கட்டுப்பாட்டு அறை என கட்டி புதுப்பிக்கப்பட்ட பழைய பஸ் ஸ்டாண்டை வருவாய் துறை அமைச்சர் சாத்துார் ராமச்சந்திரன் குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தார்.கலெக்டர் ஜெயசீலன் தலைமை வகித்தார். தமிழக முதல்வர் ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்.தென்காசி எம் .பி., ராணி, எம்.எல்.ஏ., தங்க பாண்டியன், நகராட்சி தலைவர் பவித்ரா, சீர் மரபினர் வாரிய துணை தலைவர் ராசா அருண் மொழி முன்னிலை வகித்தனர்.
0
Leave a Reply