நேபாளத்தில் பேரழிவு வெள்ளம் – உதவிக்கரம் நீட்டும் எலான் மஸ்க்!
பேரழிவில் சிக்கிய மக்களுக்கு செயற்கைக்கோள் இணையம் மூலம் உதவ முன்வந்த எலான் மஸ்க்!
நேபாளத்தில் ஏற்பட்ட பெருவெள்ளத்தால் சாலைகள், பாலங்கள் மற்றும் மொபைல் நெட்வொர்க் சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
இந்த நெருக்கடியான சூழலில், எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க் நிறுவனம் இலவச செயற்கைக்கோள் இணைய சேவையை வழங்க முன்வந்துள்ளது.
பாரம்பரிய தொலைத்தொடர்பு நெட்வொர்க் வசதிகள் இல்லாத பகுதிகளிலும், செயற்கைக்கோள் மூலம் நேரடியாக இணைய இணைப்பை வழங்க முடியும்.
இதன் மூலம் மீட்புப் பணியாளர்கள், மருத்துவக் குழுவினர் மற்றும் பேரிடரால் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் அவசரத் தேவைகளுக்காக இணையத்தைப் பயன்படுத்த முடியும்.
0
Leave a Reply