“கற்பித்தல் கலை மற்றும் கண்ணில் தெரியும் கடவுளர்கள்” என்ற தலைப்பில் புத்தாக்க பயிற்சி
விருதுநகர் மாவட்டம், சிவகாசி டான்பாமா(TANFAMA) அரங்கத்தில் (24.06.2024) சிவகாசி கல்வி மாவட்ட அரசு மற்றும் அரசு உதவி பள்ளிகளைச் சேர்ந்த பட்டதாரி ஆசிரியர்களுக்கு “கற்பித்தல் கலை மற்றும் கண்ணில் தெரியும் கடவுளர்கள்” என்ற தலைப்பில் புத்தாக்க பயிற்சி மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்., I A S., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
இப்பயிற்சி வகுப்பில் பேராசிரியர் சிவகாசி மு.ராமச்சந்திரன் அவர்கள் கலந்து கொண்டு கருத்துரை வழங்கினார்.
ஒவ்வொரு நாளும் ஏதேனும் ஒரு முக்கிய பணியை செய்யக்கூடிய ஒருவரின் தொழில்நுட்பம் வளர்ந்து கொண்டே இருக்கிறது. அனைத்து துறைகளிலும் செயற்கை நுண்ணுறிவு தொழில்நுட்பத்தின் தாக்கம் உள்ளது.
ஒவ்வொரு நிமிடமும் புதிதாக கற்றுக் கொள்வதற்கு உலகம் முழுவதும் இணையவழியில் கற்க, கற்பித்தல் செய்யக்கூடிய அமைப்புகள் மிக எளிதாக உருவாகி கொண்டிருக்கின்றன. இன்று இந்தியாவில் புதிதாக தொடங்கக்கூடிய மென்பொருள் உருவாக்கக்கூடிய நிறுவனங்கள் கல்வி சார்ந்துதான் இருக்கின்றன. பல பல்கலைக்கழகங்கள் இணையவழியில்; பாடங்களை நடத்தக்கூடிய சூழலில் இருக்கின்றன.உலகம் முழுவதும் ஒரு மிகப்பெரிய மாறுதல்கள் நடந்து கொண்டிருக்கிறது. இது போன்ற எந்த ஒரு தொழில்நுட்பம் வந்தாலும், அது அந்த துறைக்கான பணியை சிறப்பாக செய்வதற்கான உறுதுணையாக இருக்குமே தவிர, அது ஒரு மாற்றாக அமையாது. இது எந்த பணிக்கு பொருந்துகிறதோ இல்லையோ ஆசிரியர் பணிக்கு நிச்சயமாக பொருந்தும்.ஆசிரியர்கள் சிறந்த ஊக்குவிப்பாளர்களாக இருக்க வேண்டும். பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் குறைந்த மதிப்பெண்கள் எடுத்த மாணவர்கள் கூட ஆசிரியர்களின் ஊக்கத்தினால் 12 ஆம் வகுப்பில் சிறந்த மதிப்பெண்கள் பெற வைக்க முடியும்.
சமூகத்தின் அடித்தட்டு நிலை சூழ்நிலையில், பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய நிலையில் இருந்து கல்வியின்; மூலமாக பல தலைமுறைகளின் இடைவெளியை கடந்த வெற்றியாளர்களின் வாழ்க்கையை எடுத்துப் பார்த்தால், அவர்களுக்கு பின்னால் ஒரு ஆசிரியர் இருக்கிறார். அவர் ஆர்வத்தையும் விருப்பத்தையும் தோற்றுவிக்க கூடிய ஒரு ஊக்குவிப்பாளராக இருந்திருக்கிறார். யார் சிறந்த ஆசிரியர் என்று பார்த்தால் கற்கும் விருப்பத்தை தோற்றுவிப்பவரை சிறந்த ஆசிரியர். அரசு பள்ளிகளில் படிக்கக்கூடிய மாணவர்களின் சமூக பொருளாதார சூழ்நிலைகளை பற்றி ஆசிரியர்களுக்கு தெரியும். கல்வியின் வழியாகத்தான் அவர்கள் மிகப்பெரிய வெற்றியை அடைய முடியும்.வெற்றி பெறுவதற்காக உள்ள அனைத்து வாய்ப்புகளிலும் மிக எளிய குறுக்கு வழி எது என்றால் அது கல்வி வழியாக வெற்றி பெறுவதும், கடின உழைப்பு மூலமாக உயர்நிலையை அடைவதும் மட்டும் தான்.
நீங்கள் வழி நடத்தக்கூடிய அல்லது ஊக்குவிக்கக் கூடிய மாணவர்களில் யார் நாளை எந்தத் துறையில் சிறந்த தலைவர்கள் ஆவார்கள் என்று தெரியாது. ஆனால் நீங்கள் ஒவ்வொரு மாணவரையும், எதிர்காலத்தில் இவன்;, இவனது குடும்பம், இவன் வாழக்கூடிய நாடு எல்லாவற்றிற்கும் இந்த மாணவனால் ஒரு பயன் விளையும் என்ற நம்பிக்கையை முன் வைத்து ஒவ்வொரு நாளும் செயல்படுவீர்கள் என நம்புகிறேன் என தெரிவித்தார்.
0
Leave a Reply