04 th JUNE விளையாட்டு போட்டிகள்
ஹாக்கி
சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பு சார்பில், புரோ லீக்தொடர் நடக்கிறது. 9 அணிகள் பங்கேற்கின்றன. இதுவரை நடந்த போட்டிகளின் முடிவில் இங்கிலாந்து (16 புள்ளி), பெல்ஜியம் (16), இந்தியா (15) 'டாப்-3' இடத்தில் உள்ளன.
அடுத்து இந்திய அணி, நெதர்லாந்து மண்ணில் நெதர்லாந்து(ஜூன்7,9), அர்ஜென்டினா(ஜூன் 11,12) அணிகளுடன் விளையாட உள்ளது. இதற்குத் தயாராகும் வகையில் அயர்லாந்து சென்ற இந்திய அணி இரண்டு போட்டியில் பங்கேற்கிறது. முதல் போட்டி டப்ளினில் நடந்தது. இந்தியாவுக்கு மன்தீப் சிங், கேப்டன் ஹர்மன்பிரீத் சிங் கைகொடுக்க, முதல் பாதியில் 2-0 எனமுன்னிலை பெற்றது.
இரண்டாவது பாதியில் இந்தியாவின் தில்பிரீத் சிங், இரண்டு கோல்அடித்தார். முடிவில் இந்திய அணி 4,0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
பாட்மிண்டன்
'சூப்பர் 1000' பாட்மின்டன் தொடர்இந்தோனேஷியாவில் நேற்று துவங்கியது. பெண்கள் ஒற்றையரில்,17வது இடத்திலுள்ள இந்தியாவின் சிந்து,33வது இடத்திலுள்ள ஜப்பானின் ஒகுஹராவை சந்தித்தார்.
இதில் சிந்து 22-20,21-23,21-15 என்ற கணக்கில் வெற்றி பெற்றார்.
ஆண்கள் இரட்டையரில் இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ், சிராக் ஷெட்டி ஜோடி,இந்தோனேஷியாவின் லியோ ராலி, பாகஸ் மவுலானா ஜோடியை முதல் சுற்றில் எதிர் கொண்டது. இதில் இந்திய ஜோடி18-21, 21-18, 21-14 என வெற்றி பெற்றது.
ஆண்கள் ஒற்றையரில் இந்திய வீரர் பிரனாய், இந்தோனேஷிய வீரர் பர்ஹானைசந்தித்தார்.
பிரனாய் 17-21,18-21 என்ற நேர் செட்டில் தோல்வியடைந்தார்.
இளம்இந்திய வீரர் லக்சயா சென், 11–21, 22-20, 15-21 என சீனவீரர் யு க்யுஷியிடம் வீழ்ந்தார்.
செஸ்
நார்வேயில், சர்வதேச செஸ் ('கிளாசிக்கல்') தொடர் நடக்கிறது. 7வது சுற்றில் நடப்பு உலக சாம்பியன் இந்தியாவின் குகேஷ் 19, சக அர்ஜுனை வீரர் சந்தித்தார். 92 வது நகர்த்தலில் குகேஷ் வெற்றி பெற்றார்.
7 சுற்று முடிவில் அமெரிக்காவின் காருணா (12.5), குகேஷ் (11.5) முதல் இரு இடத்துக்கு முன்னேறினர். நார்வேயின் கார்ல்சன் (11.0), 3வது இடத்தில் பின் தங்கினார். அர்ஜுன் (7.5) 5வதுஇடத்தில் உள்ளார்.
பெண்கள் பிரிவு ஏழாவது சுற்றில் இந்தியாவின் வைஷாலி, சீனாவின் டிங்ஜீயிடம் தோல்வியடைந்தார். இந்தியாவின் ஹம்பி, உக்ரைனின் அனா முஜிசக் மோதிய மற்றொரு போட்டி 'டிரா' ஆனது. அடுத்து நடந்த 'டைபிரேக்கர்' போட்டியும் 'டிரா' ஆனது.
சர்வதேச செஸ் தரவரிசையில் அர்ஜுனை (2772.6,5வது இடம்) பின்தள்ளி குகேஷ் 4வது இடத்துக்கு முன்னேறினார் குகேஷ் (2782,3), பிரக்ஞானந்தா (2765.9) 7வது, அரவிந்த் சிதம்பரம் (2753.5) 10வது இடம்பிடித்தனர். உலகத் தரவரிசையில் 'டாப்-10' பட்டியலில் இந்திய வீரர்கள் இடம் பெற்றிருப்பது இது தான் முதன் முறை.
0
Leave a Reply