அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளைச் சேர்ந்த 300 மாணவர்கள் கலந்து கொண்ட சிறப்புக் கோடைகால குறள் மாணவர்கள் பயிற்சி முகாம்- 2024
விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை வட்டம், செவல்பட்டி பி.எஸ்.ஆர் கல்லூரியில் மாவட்ட நிர்வாகம் சார்பில் நடைபெற்ற அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் பயிலும் தமிழார்வம் மிக்க மற்றும் முன் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட 300 மாணவர்கள் கலந்து கொண்ட சிறப்புக் கோடைகால குறள் மாணவர்கள் பயிற்சி முகாம் 2024உண்டு உறைவிட பயிற்சி முகாமினைகோ ஆப்டெக்ஸ் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர்/மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மரு.இரா.ஆனந்தகுமார், I A S., அவர்கள் மற்றும்மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,., அவர்கள் I A S, (04.05.2024) தொடங்கி வைத்தனர்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் மற்றும் கோ ஆப்டெக்ஸ் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர்/மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அவர்கள் ஆகியோர் தெரிவித்ததாவது:விருதுநகர் மாவட்டத்தில், மாணவர்களின் தனித்திறமைகளை மேம்படுத்தும் வகையில் 02.05.2024 முதல் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளைச் சேர்ந்த தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுக்கு பல்வேறு கோடைகால உண்டு, உறைவிடப் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது
அதன்படி திருவில்லிபுத்தூர் வி.பி.எம்.எம் பொறியியல் கல்லூரியில் 02.05.2024 முதல் 11.05.2024 வரை 100 மாணவர்களுக்கு ஆங்கில பேச்சுத் திறன் பயிற்சி முகாமும், 100 மாணவர்களுக்கு ஓவியக்கலை பயிற்சி முகாமும்,விருதுநகர் எஸ்.எப்.எஸ். மெட்ரிக் பள்ளியில் 02.05.2024முதல்11.05.2024வரை50மாணவர்களுக்குஇசை,பாடல்பயிற்சிமுகாமும்,சிவகாசிகாளீஸ்வரிகல்லூரியில்02.05.2024முதல்11.05.2024வரை50மாணவர்களுக்குதலைமைப்பண்புபயிற்சிமுகாமும்,இராஜபாளையம் ராஜூக்கள் கல்லூரியில் 03.05.2024 முதல் 07.05.2024 வரை 100 மாணவர்களுக்கு இளம் பசுமை ஆர்வலர் பயிற்சி முகாமும் நடத்தப்பட்டு வருகிறது.இப்பயிற்சி வகுப்பில் 6 முதல் 9 ஆம் வகுப்பு பயிலும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளைச் சேர்ந்த தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுக்கு உணவு மற்றும் தங்குமிடத்துடன் பயிற்சி அளிக்கப்படுகிறது.அதன் ஒரு பகுதியாக இன்று அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் பயிலும் தமிழார்வம் மிக்க மற்றும் முன் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட 300 மாணவர்கள் கலந்து கொண்ட சிறப்புக் கோடைகால குறள் மாணவர்கள் பயிற்சி முகாம் 2024 துவக்கி வைக்கப்பட்டுள்ளது.
சென்ற இடத்தால் செலவிடா தீதொரீஇ
நன்றின்பால் உய்ப்ப தறிவு
என்ற குறளில் மனத்தைச் சென்ற இடத்தில் செல்லவிடாமல், தீமையானதிலிருந்து நீக்கிக் காத்து நன்மையானதில் செல்லவிடுவதே அறிவாகும் என திருவள்ளுவர் கூறுவதைப் போல, மாணவர்களின் கோடைகால விடுமுறை நாட்களை பயனுள்ளதாக ஆக்கும் வகையில், இது போன்ற சிறப்பு கோடைகால பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.
எல்லா காலகட்டத்தில் நமக்கு திருக்குறள் உதவி செய்து கொண்டு இருக்கிறது. நீங்கள் எவ்வளவு பெரிய ஒரு சிக்கலில் இருந்தாலும் அந்த சிக்கலுக்கான தீர்வு திருக்குறளில் உள்ளது.உங்களுக்கு அறிவுரைகள் வழங்கவும், உதவிகள் செய்யவும் ஒரு நல்ல நண்பனாக அல்லது ஆசிரியனாக அல்லது நல்ல பெற்றோராக நிறைய நபர்கள் இருக்கிறார்கள்.அதை மொத்தமாக இந்த திருக்குறள் செய்யும்.
நம் வாழ்க்கையில் நமக்கான சந்தேகங்கள் அனைத்திற்கும் சரியான விளக்கத்தை திருவள்ளுவர் அளித்துள்ளார். எனவே, இந்த வகுப்பினை பயன்படுத்தி சிறப்புமிக்க திருக்குறளை மாணவ, மாணவிகளை கற்றுக் கொண்டு, வாழ்க்கையில் அறநெறியுடன், நல்லொழுக்கம் மிக்கவர்களாக மாணவர்கள் உருவாகிட வேண்டும் என தெரிவித்தார்.
0
Leave a Reply