முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம் மூலம் 33,231 மாணாக்கர்கள் பயன்பெற்றுள்ளனர் .
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கிராம, நகர்புற பகுதிகளில் உள்ள குழந்தைகள் பள்ளிகள் தூரமாக இருப்பதாலும், சிலர் குடும்ப சூழ்நிலை காரணமாகவும் காலை உணவு சாப்பிடுவதில்லை என்பதை கருத்தில் கொண்டும், அரசு பள்ளி மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்துவதற்காகவும், இடைநிற்றலை தவிர்ப்பதற்காகவும், ஊட்டசத்து குறைபாட்டை போக்குவதற்காகவும் இந்திய நாட்டிலேயே முன்னோடி திட்டமான அரசு தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டமான “முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம்”-னை கடந்த 15.09.2022 அன்று முதற்கட்டமாக தொடங்கி வைத்தார்கள்.
அதனடிப்படையில், மாணவ, மாணவிகள் பசியின்றி பள்ளிக்கு வருதல், ஊட்டச்சத்து குறைபாட்டினால் பாதிக்கப்படாமலிருத்தல், ஊட்டச்சத்து நிலையை உயர்த்துதல், பள்ளிகளில் மாணவர்களின் வருகையை அதிகரித்தல், வேலைக்குச் செல்லும் தாய்மார்களின் பணிச்சுமையை குறைத்தல் ஆகியவை குறிக்கோளாக கொண்டு, விருதுநகர் மாவட்டத்தில் முதல் கட்டமாக இத்திட்டத்தின் கீழ், ரூ.99.73 இலட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு, காரியாபட்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 69 அரசு தொடக்கப்பள்ளிகளில் பயிலும் 3098 மாணவர்கள் பயன்பெறும் வகையில் தொடங்கி வைக்கப்பட்டது.
அதனைத்தொடர்ந்து, இரண்டாம் கட்டமாக ரூ.7.05 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு, மாவட்டத்தில் உள்ள 11 வட்டங்கள் மற்றும் 7 பேரூராட்சிகளில் உள்ள 768 அரசு தொடக்க பள்ளிகளில் பயிலும் 33231 மாணவர்கள் பயன்பெறும் வகையில் விரிவுப்படுத்தப்பட்டுள்ளது.இத்திட்டத்தின் மூலம், வழங்கப்படும் காலை உணவினால், பசிப்பிணி நீங்கி மனநிறைவோடு பிள்ளைகள் படிப்பார்கள். அவர்கள் மனதில் பாடங்கள் பதியும். மாணவர்கள் பள்ளிக்கு ஆர்வத்துடன் வருவதுடன், சீரான வருகைப் பதிவும் இருக்கும். தமிழ்நாட்டின் கல்வி கற்போர் விகிதமும் அதிகம் ஆகும். இதன் மூலம் கல்வியில் சிறந்த மாநிலமாக உருவாவதற்கும்,மாணவர்களுக்கு ஒரு சிறந்த எதிர்காலத்தை உருவாக்குவதற்கும் இத்திட்டம் அடித்தளமாக இருக்கும்
இத்திட்டத்தில் பயன்பெற்று வரும் மாணவி தெரிவிக்கையில்:என் பெயர் ஆனந்தி. நான் பாலவனத்தம் அரசு தொடக்கப்பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வருகிறேன். என் தந்தை தினக்கூலி வேலை செய்து வருகிறார். தாய் விவசாயம் கூலி வேலை செய்து வருகிறார். நான் தினமும் பள்ளிக்கு வரும்போது, என் பெற்றோர் வேலைக்கு செல்வதன் காரணமாக அவர்களால் காலை உணவை சரிவர எனக்கு தயார் செய்து கொடுக்காமல் அவசர அவசரமாக வேலைக்கு சென்று விடுவார். நானும் வீட்டில் இருந்த உணவுகளை சாப்பிட்டு விட்டு பள்ளிக்கு வருவேன். சில நேரங்களில் காலை உணவை சாப்பிடாமல் கூட பள்ளிக்கு வந்துள்ளேன். இந்த நிலையில் முதலமைச்சர் ஐயா அவர்கள் எங்களுக்கு காலை உணவு திட்டத்தை செயல்படுத்தி உணவு வழங்கி வருகின்றனர். இதில் உப்புமா, கிச்சடி உள்ளிட்ட உணவுகள் வழங்கப்படுகின்றன. இந்த காலை உணவினால் எனக்கு மிகவும் உற்சாகம், சுறுசுறுப்பாகவும் இருக்கின்றது. இங்கு வழங்கப்படும் உணவுகள் சுவையாகவும் இருக்கின்றது. எங்களுக்கு இந்த காலை உணவு திட்டத்தை கொண்டு வந்து காலை உணவு அளித்த தமிழக அரசுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
பள்ளி குழந்தைகளுக்கு முதலில் மதிய உணவு திட்டம் மூலம் உணவு வழங்கப்பட்டு வந்தது. தற்போது காலை உணவும் சேர்த்து வழங்கப்படுகிறது. இதனால் பள்ளி குழந்தைகள் இரண்டு வேளை திருப்தியாக உணவருந்துகிறார்கள். இத்திட்டத்தினால் பள்ளி மாணவர்களின் வருகைப் பதிவும், அவர்களின் கற்றல் திறனும் மேம்பட்டுள்ளது. இத்திட்டம் ஏழை, எளிய மற்றும் கிராமப்புற பகுதிகளில் இருந்து வரும் மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. இத்திட்டத்தை செயல்படுத்துவதற்காக தமிழக அரசுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
0
Leave a Reply