விருதுநகர் மூன்றாவது புத்தகத் திருவிழா- 2024 நிகழ்ச்சிகள்
விருதுநகரில் மாவட்ட நிர்வாகம், பொது நூலக இயக்ககம் மற்றும் தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் இணைந்து, விருதுநகர்-மதுரை சாலையில் அமைந்துள்ள கே.வி.எஸ் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள பொருட்காட்சி மைதானத்தில் 27.09.2024 முதல் 07.10.2024 வரை நடைபெறும் மூன்றாவது விருதுநகர் புத்தகத் திருவிழா நடைபெற்று வருகிறது.
, மூன்றாம் நாளான 29.09.2024 அன்று துணை இயக்குநர் (திருவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகம்) திரு.ப.தேவராஜ்.,இ.வ.ப. அவர்கள் தலைமையில், வத்திராயிருப்பு திரு.தெ.சு.கவுதமன் அவர்கள் எழுதிய “அப்பாவின் வாசம்“ என்ற நூல் வெளியீட்டு நிகழ்ச்சியும், பேச்சாளர் திரு.சி.அன்னக்கொடி அவர்கள் “கி.ராவும் நானும்” என்ற தலைப்பிலும், திரைப்படக் கலைஞர் மற்றும் இயக்குநர் திரு.தம்பி ராமையா அவர்கள் “உறவுகள்”; என்ற தலைப்பிலும், சிறப்புரை ஆற்றினார்கள்.
பின்னர், நடைபெற்ற சுழலரங்கம் நிகழ்ச்சியில், இலக்கியத்தில் மரபு குழுவில், திரு.கா.காளியப்பன் அவர்கள் பழந்தமிழ் இலக்கியத்தில் மரபு என்ற தலைப்பிலும், இலக்கிய விமர்சகர் திரு.ம.மணிமாறன் அவர்கள் கரிசல் இலக்கியத்தில் மரபு என்ற தலைப்பிலும், கவிஞர் திரு.அ.இலட்சுமி காந்தன் அவர்கள் நவீன இலக்கியத்தில் மரபு என்ற தலைப்பிலும்,இலக்கியத்தில் இயற்கை குழுவில், கவிஞர் திரு.எல்.கே.சுபாஷ் சந்திரபோஸ் அவர்கள் பழந்தமிழ் இலக்கியத்தில் இயற்கை என்ற தலைப்பிலும், திரு.முத்து பாரதி அவர்கள் கரிசல் இலக்கியத்தில் இயற்கை என்ற தலைப்பிலும், இயற்கை ஆர்வலர் ஆர்.ஆனந்தி அவர்கள் நவீன இலக்கியத்தில் இயற்கை என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள்.
இந்நிகழ்ச்சியில், மாவட்டத் தீயணைப்பு அலுவலர் திரு.க.ஜே.விவேகானந்தன் அவர்கள் வரவேற்புரையும், கோட்ட வன அலுவலர் திரு.நவநீதகிருஷ்ணன் அவர்கள் நன்றியுரையும் வழங்கினார்கள்.
0
Leave a Reply