25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >>


மத்திய அரசு செய்த பாஸ்போர்ட் விண்ணப்ப விதிகளில் 4 மாற்றங்கள்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

மத்திய அரசு செய்த பாஸ்போர்ட் விண்ணப்ப விதிகளில் 4 மாற்றங்கள்

மத்திய அரசு நான்கு முக்கிய பாஸ்போர்ட் விண்ணப்ப விதிகளில்,  மாற்றங்களை செய்துள்ளது. 

பிறப்பு சான்றிதழ்

2023 அக்டோபர், 1க்கு பின் பிறந்தவர்களுக்கான பிறந்த தேதிக்கு, நகராட்சி, பிறப்பு மற்றும் இறப்பு பதிவாளர் அல்லது பிறப்பு மற்றும் இறப்பு பதிவு சட்டத்தின் கீழ் உள்ள அதிகாரியால் வழங்கப்பட்ட பிறப்பு சான்றிதழ் மட்டுமே சான்றாக எடுத்துக் கொள்ளப்படும்.

அதற்கு முன் பிறந்தவர்கள், பான் கார்டு, ஓட்டுனர் உரிமம். பள்ளி மாற்றுச் சான்றிதழ், மெட்ரிகுலேஷன் சான்றிதழ் உள்ளிட்ட மற்ற ஆவணங்களை தொடர்ந்து பயன்படுத்தலாம். 

வண்ண அடையாளம்

பாஸ்போர்ட்டின் வகைகளை எளிதில் அறியும் வகையில், இனி குடிமக்களுக்கு எப்போதும் போல நீல நிறத்தில் வழங்கப்படும். அரசு அதிகாரிகளுக்கு வெள்ளை நிறம், துாதரக அதிகாரிகளுக்கு சிவப்பு நிறத்திலான பாஸ் போர்ட்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன.

முகவரி 

இதுவரை, பாஸ்போர்ட்டின் கடைசி பக்கத்தில் அச்சிடப்பட்ட முகவரி, பாஸ்போர்ட் வைத்திருப்போரின் பாதுகாப்பு கருதி இனி அச்சிடப்படாது. அதற்கு பதில், குடியுரிமை அதிகாரிகள் மட்டும், 'ஸ்கேன்' செய்து அறியும் வகையில், 'பார்கோடு' வடிவில் அச்சிடப்படும்.  

பெற்றோர் பெயர்

இதுவரை, பாஸ் போர்ட்டின் கடைசி பக்கத்தில் அச்சிடப்பட்டு வந்த பெற்றோர் பெயர் இனி அச்சிடப்படாது.அதாவது, ஒற்றை பெற்றோர், பிரிந்து சென்ற பெற்றோரின் குழந்தைகளின் தனியுரிமையை பாதுகாக்கும் வகையில், இந்த முறை பின்பற்றப்பட உள்ளது.

நாட்டில் தற்போது. 422 பாஸ்போர்ட் சேவா கேந்திரங்கள் உள்ளன. அவற்றை அடுத்த ஐந்தாண்டுகளில், 600 ஆக உயர்த்த, மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது.இதற்காக, அஞ்சல் துறையுடன் வெளியுறவு அமைச்சகம் செய்திருந்த புரிந்துணர்வு ஒப்பந்தம், மேலும் ஐந்தாண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News