25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையத்தில் த.வெ.க. மருத்துவ முகாம். >> சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்க தடை. >> இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >>


எச்சரிக்கை பலகை இன்றி  4 வழிச்சாலை ரயில் பாதை மேம்பாலப்பணி விபத்து வாய்ப்பு.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

எச்சரிக்கை பலகை இன்றி  4 வழிச்சாலை ரயில் பாதை மேம்பாலப்பணி விபத்து வாய்ப்பு.

திருமங்கலம் - கொல்லம் நான்கு வழிச்சாலை பணியில் ராஜபாளையம் புது பஸ் ஸ்டாண்ட் அடுத்து முதுகுடி அருகே ரயில் பாதை மேம்பால பணி தொடக்க நிலையில் உள்ளது. இதற்கான மேம்பால பணிகள் நடந்து வரும் நிலையில் நான்கு வழிச்சாலையின் எஸ்.ராமலிங்காபுரம் பிரிவு சர்வீஸ் ரோடு தொடக்கத்தில் எச்சரிக்கை அறிவிப்பு வைக்காமல்  தடையை அமைத்துள்ளனர். 

அட்டை மில் முக்கிலிருந்து ராஜபாளையம் அடுத்த முதுகுடி முன்பு வரை 5 கி.மீ சுலபமாக நான்கு வழிச்சா லையிலேயே பயணிக்கலாம். ஆனால் தற்போது வரை ரயில்வே பாதை மேம்பாலம் முடிவடையாமல் துண்டிக்கப்பட்டுள்ளது.இதை அறியாத கனரக வாகனங்கள் டூவீலர்கள் பாலத்தின் உச்சிவரை வந்து சங்கடத்திற்கு உள்ளாகி திரும்பு கின்றனர். கவனம் இல்லையெனில் தடுப்பை தாண்டி வாகனங்கள் விபத் துக்கு உள்ளாகும் நிலை உள்ளது.மேம்பால சாலை தொடக்கத்திலேயே எச்சரிக்கை அறிவிப்பு பலகை வைத்து விபத்துக்களை தடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.       

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News