வயதானவர்களுக்கு வரும் கிட்னி நோய்கள்.
ஆண்களுக்கு மட்டுமே உள்ள புராஸ்டேட் சுரப்பி 60 வயதுக்கு மேல் பெரிதாகி, சிரமம் கொடுக்க வாய்ப்புள்ளது. Hyperplasia (BPH) என்றால் புற்றுநோய் இல்லாத புராஸ்டேட் சுரப்பிப் பெருக்கம் என்று பொருள்.
அடிக்கடி சிறுநீர் கழித்தல், அதிலும் இரவு நேரத்தில் கட்டுப்படுத்த சிரமப்படுதல், நலிந்து வரும் சிறுநீர்ப்போக்கு, தடுக்கப்பட்டு வெளியேறும் சிறுநீர், சிறுநீர் கழித்தபின் சொட்டுச் சொட்டாகச் சொட்டுதல் முதலியவை புராஸ்டேட் நோயின் அறிகுறிகளாகும்.நாளடைவில் சிறுநீர்ப்பை அல்லது இருசிறுநீரகங்களும் பாதிக்கப்பட வாய்ப்புண்டு. இந்த நோயின் குணங்களைக் கண்டறிய PSA / Uroflometry / Orodynamic studies /Cystoscopy/ Prostate biopsy / MRI Scan முதலிய பரிசோதனைகள் பயன்படும்.
வாழ்க்கைமுறை மாற்றங்கள்
சிறுநீரை நீண்ட நேரம் தேக்கி வைக்க வேண்டாம்.
இருமுறை தொடர்ந்தாற்போலச் சிறுநீர் கழிக்கலாம்.
மதுவைத் தவிர்க்கவும்.
காபி, தேநீர் போன்ற திரவங்களை மாலை நேரத்துக்குப் பின் தவிர்க்கவும்.
ஒரே நேரத்தில் அதிகளவு நீரைக் குடிக்க வேண்டாம்.
ஆஸ்துமாவுக்காகக் கொடுக்கப்படும் சில மருந்துகளைத் தேவையில்லாமல் அதிகமாக எடுக்க வேண்டாம்.
அடிவயிற்றுக்கு உரிய தேகப் பயிற்சி செய்யவும்.
மலச்சிக்கலைத் தவிர்க்கவும்.
இந்நோய்க்கு கொடுக்கும் மாத்திரை ஆறு மாத காலத்திற்குப் பிறகே நன்கு வேலை செய்ய ஆரம்பிக்கும்.
வயதானபெண்டிர்க்குச்சிறுநீர்ப்பையிலிருந்து வெளிவரும் யுரித்ரா சுருங்க வாய்ப்புண்டு. சிறுநீர் மற்றும் மலம் வெளியேறும் பாதைகளைத் தாங்கும் சதைகள் (pelvic floor muscles) தளர்ச்சி அடைவதால் சிறுநீரை அடக்க முடியாமல் வெளியேறுவதுண்டு.
ஆரம்பக் காலத்திலேயே மருத்துவரை அணுகினால் நல்ல உடல்நலத்துடன் நீண்ட நாள் நாம் வாழலாம்.
0
Leave a Reply