71-ஆவது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா - கூட்டுறவு சங்கப் பணியாளர்கள் மற்றும் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கான கருத்தரங்கம்
விருதுநகர் மாவட்டம், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி வளாகத்தில் (16.11.2024) 71-ஆவது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா - கூட்டுறவு சங்கப் பணியாளர்கள் மற்றும் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கான கருத்தரங்கம் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
கூட்டுறவு துறை என்பது ஏறத்தாழ 70 ஆண்டுகாக செயல்பட்டு வருகிறது. கடந்த பத்தாண்டுகளில் நவீன வங்கி துறை மாற்றங்களின் தொழில்நுட்பத்துறை மாற்றங்களை கூட்டுறவுத்துறை கையாண்டு ஒட்டுமொத்த பணம் கையாளக்கூடிய விகிதம் குறைந்து இருக்கிறது. இருந்தாலும், ஒவ்வொரு கிராமங்களிலும் குறிப்பாக விவசாய பெருமக்கள் அதிகமாக வாழக்கூடிய பகுதிகளில் கூட்டுறவு வங்கிகளின் உடைய செயல்பாடுகளின் தேவை அதிகமாக உள்ளது.மேலும் இந்த துறையில் உள்ள பணியாளர்கள் உங்களின் பணிகளோடு, உங்களுடைய உடல் நலன் மற்றும் குடும்ப நலனை பேணுவதிலும் அக்கறையுடன் இருக்க வேண்டும்.தமிழ்நாட்டில் 20 சதவிகிதம் நபர்களுக்கு நீரிழிவு மற்றும் இரத்த அழுத்தம் உள்ளிட்ட நோய்கள் காணப்படுகின்றன. 2030-ல் உலகத்தில் சர்க்கரை நோயின் தலைநகரமாக இந்தியா மாறும் என ஆய்வுகள் தெரிவிக்கிறது.எனவே, ஒவ்வொரு பணியாளர்களும் தங்களுடைய தனிப்பட்ட உடல் நலனையும், குடும்பத்தினருடைய உடல் நலனையும் பேணிக்கொள்வது இந்த வார விழாவின் ஒரு கருத்தாக இருக்க வேண்டும்.
மேலும், ஒரு வங்கி நுகர்வோராக இன்று கூட்டுறவுத் துறையில் நாம் எதிர்க்கொள்ளக் கூடிய சிக்கல்கள் அதற்கு நவீன தொழில்நுட்பம் எத்தகைய தீர்வுகளை தருகிறது. தீர்வுகளை எல்லாம் எதிர் கொள்ளக்கூடிய அளவிற்கு இருக்கின்றனவா என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.ஒவ்வொரு நவீன தொழில்நுட்பமும் குறிப்பாக சமீபத்தில் மிகப்பெரிய அளவில் பங்கு வகிக்கக்கூடிய செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பமானது இன்று வங்கிகளின் அன்றாடம் நீங்கள் உங்களுடைய நேரத்தை எதற்காக வங்கியில் செலவழிக்கிறீர்களோ அவற்றை எல்லாம் செய்வதற்கு செயற்கை தொழில்நுட்பங்களின் உதவி உங்களின் நேரத்தை எளிதாக்குகிறது.செயற்கை தொழில்நுட்பத்தில் இருந்து ஒரு தனிமனித ஆற்றல் வெளிப்படுகிறது. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் துணை இல்லாமல் இன்றைய காலகட்டத்தில் எதுவும் செய்ய இயலாது. இன்னும் 30 ஆண்டுகள் இந்த துறையில் இருந்து வேலை செய்பவர்கள் நிச்சயமாக இதனை புரிந்து கொள்ள வேண்டும். இல்லையென்றால் இந்த துறையினுடைய வளர்ச்சியை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செய்ய இயலாது.
அது கூட்டுறவுச் சங்கத்தின் உடைய சேவையாக இருந்தாலும், சங்கத்தின் உடைய பணியாளர்கள் அல்லது கூட்டுறவுத் துறையினுடைய பணியாளர்கள் யாராக இருந்தாலும் நவீன தொழில்நுட்ப உதவிகளோடு, வங்கி சேவையை மேம்படுத்துவது என்பது மிக மிக அவசியம். தனிப்பட்ட ஒரு அலுவலரின் செயல்பாட்டிற்கும் அது உதவி செய்யும். வங்கிகள் சங்கங்களின் செயல்பாட்டிற்கும் உதவி செய்கின்றன. இதனை எல்லாம் புரிந்து கொள்வதற்கான முயற்சிகளை மேற்கொள்வது தான் இந்த கூட்டுறவு வார விழா கொண்டாடுவதற்கான தேவையாக இருக்கிறது.மாவட்டத்தில், பெரும்பான்மையான கிராமப்புறங்களில் 5 கி.மீ இடைவேளையில் வங்கி சேவைகள் இருந்தும் உரிய நேரத்தில் வங்கி சேவைகள் கிடைக்க பெறததால், ஏழை எளிய மக்கள் தனியார் நிதி நிறுவனங்கள் மூலம் கடன் பெற்று பல இன்னல்களை அனுபவித்து வருகின்றனர் எனவும், இந்த நிலை மாற கூட்டுறவு நிறுவனங்கள் கிராம புறங்களில் வசிக்கும் மக்களின் பணத்தேவைகளை பூர்த்தி செய்ய தங்களிடம் வரப்பெறும் கடன் மனுக்களை உரிய காலத்தில் பரிசீலித்து கடன் வழங்கிட வேண்டும். மேலும், மகளிர் உதவிக்குழுக்களுக்கு அதிகளவு கடன் வழங்கி ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்திட கூட்டுறவு நிறுவனங்கள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
அனைவருக்கும் உரிய நேரத்தில் வங்கி சேவை சென்றடைய செய்யும் வழிகளை கண்டறிந்து அதனை நிறைவேற்றிட வேண்டும். எனவே, இந்த கூட்டுறவுத்துறையின் மூலமாக நாம் சேவையை தரமான சேவையாக உரிய நேரத்தில் அளிக்க வேண்டுமென மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.முன்னதாக, கூட்டுறவுத்துறை அலுவலர்கள் மற்றும் சங்கப்பணியாளர்கள் அனைவரும் 71-ஆவது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா உறுதிமொழியினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் எடுத்துக்கொண்டனர்.இக்கருத்தரங்கில், உதவி ஆட்சியர் (பயிற்சி) திரு.ஹிமான்சு மங்கள்,I A S., கூட்டுறவுச் சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் திரு.பா.செந்தில் குமார், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் இணைப்பதிவாளர்/செயலாட்சியர் திருமதி பெ.இராஜலெட்சுமி, துணைப்பதிவாளர்கள், கூட்டுறவு வங்கிப் பணியாளர்கள், சங்கப் பணியாளர்கள், மகளிர் சுய உதவிக்குழு பெண்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
0
Leave a Reply