இனிப்பும், புளிப்பும் கலந்த சுவை கொண்ட நட்சத்திரப் பழம்
நட்சத்திரப் பழம் தாய்லாந்து, மலேசியா, சிங்கப்பூர், மியான்மர், இந்தோனேசியாவில் அதிகம் விளைவிக்கப்படுகிறது. தமிழ்நாடு மற்றும் கேரளாவில் சில இடங்களில் மட்டுமே இது விளைகிறது. இதன் வடிவம் நட்சத்திரம்போல் இருப்பதால் இதனை நட்சத்திரப் பழம் என அழைக்கின்றனர். மஞ்சள் கலந்த பச்சை நிறத்தில் காணப்படும். இது இனிப்பும், புளிப்பும் கலந்த சுவை கொண்டது.
குளிர்காலத்தில் ஏற்படும் நோய்களைத் தீர்க்கும் குணம் கொண்டதால் இது ஆஸ்திரேலியா, தென் அமெரிக்கா, ஹவாய், புளோரிடா தீவுகளில் அதிகம் பயிரிடப்படுகிறது. இப்பழம் குறைந்த விலையில் கிடைக்கும். இதனை நேரடியாக சாப்பிடலாம். உடலுக்குத் தேவையான அனைத்து சத்துக்களும் நிரம்பிய பழங்களுள் இதுவும் ஒன்று.
10 கிராம் நட்சத்திர பழத்தில் கார்போ ஹைட்ரேட்ஸ் - 6.73 கிராம், சர்க்கரை - 3.98 கிராம்,கொழுப்பு - 0.33 கிராம், புரோட்டீன் - 1.04 கிராம், போலேட் -12 கிராம், வைட்டமின் சி- 34.4 கிராம், பாஸ் பரஸ் - 12 மி.லி. கிராம், பொட்டாசியம் - 133 மி.லி.கிராம்,துத்தநாகம்- 12 மி.லி.கிராம் உள்ளது.
0
Leave a Reply