கீரை அடை
தேவையான பொருட்கள்- குட மிளகாய் 1 சிறியது (நறுக்கியது) கோதுமை மாவு 3/4 கப், கடலை மாவு 3/4 கப், கான் பிளவர் சோள மாவு 1/4 கப், ராகி மாவு 1/4 கப், இஞ்சி 1/4 டீஸ்பூன் பொடியாக நறுக்கியது, சீரக தூள் 1/4 டீஸ்பூன், கரம் மசாலா தூள் 1/4 டீஸ்பூன், மிளகு தூள் பெப்பர் தேவையான அளவு, உப்பு தேவையான அளவு.
கீரை3 கப், பாலக்கீரை, முருங்கைக் கீரை, பொடியாக நறுக்கி வதக்கவும் .எந்த வகை கீரை இருந்தாலும் போடலாம் அல்லது இரண்டு வகை கீரை இருந்தாலும் கலந்து செய்யலாம்.
செய்முறை- முதலில் நான்கு விதமான மாவுகள் , கீரை, குடமிளகாய் இவற்றை ஒரு பாத்திரத்தில்போட்டுதேவையான அளவு தண்ணீர் விட்டு பிசைய வேண்டும்.
பின் இஞ்சி சீரகத்தூள் கரம் மசாலா தூள், மிளகுத்தூள், உப்பு போட்டு கலந்து தோசை மாவு பதத்திற்கு கலந்து தோசை மாதிரி வார்த்தால் சத்தான கீரை அடை ரெடி.
0
Leave a Reply