25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >>


அர்ஜுன் தாஸின் 'கான் சிட்டி': ஜூன் 26-ல் ரிலீஸ்!
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

அர்ஜுன் தாஸின் 'கான் சிட்டி': ஜூன் 26-ல் ரிலீஸ்!

 ஹரிஷ் துரைராஜ் இயக்கத்தில் அர்ஜுன் தாஸ் மற்றும் அன்னா பென் முதன்முறையாக இணைந்து நடித்துள்ள திரைப்படம் 'கான் சிட்டி'. இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் வடிவுக்கரசி மற்றும் யோகி பாபு நடித்துள்ளனர். பிரபல இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

நடுத்தரக் குடும்பம் ஒன்று சந்திக்கும் கடன் தொல்லைகள் மற்றும் அதனால் ஏற்படும் வாழ்வாதாரப் போராட்டங்களை மையமாகக் கொண்டு, மிகவும் எதார்த்தமான பின்னணியில் இப்படம் உருவாகி வருகிறது.

இப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்து, தற்போது இறுதிக்கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. இந்நிலையில், இப்படம் வரும் ஜூன் 26-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

சமீபத்தில் நடைபெற்ற இப்படத்தின் விழாவில் இயக்குனர் ஹரிஷ் துரைராஜ் பேசுகையில், ஒரு நெகிழ்ச்சியான தகவலைப் பகிர்ந்து கொண்டார்:

"சுமார் 5 ஆண்டுகால போராட்டத்திற்குப் பிறகு தான் எனக்கு இந்த இயக்குனர் வாய்ப்பு கிடைத்தது. இப்படத்தில் யோகிபாபு அண்ணனை நடிக்க வைக்க ஆசைப்பட்டேன். எனது சூழ்நிலையைப் புரிந்து கொண்ட அவர், எனக்காகத் தனது வழக்கமான சம்பளத்தில் பாதியை மட்டுமே வாங்கிக் கொண்டு நடித்துக் கொடுத்தார்."

இதற்குப் பதிலளித்துப் பேசிய யோகிபாபு, "ஹரிஷ் துரைராஜ் வருங்காலத்தில் இன்னும் பெரிய நடிகர்களை வைத்து, பெரிய பட்ஜெட் படங்களை இயக்கிப் புகழின் உச்சிக்குச் செல்ல வேண்டும்" எனத் தன் வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News