கோவிலின் காவலனாக யாளிகள்,
டைனோசர் போன்ற ராட்சத விலங்குகள் இந்த மண்ணில் நடமாடி இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதே போல், நமது நாட்டில் யாளி என்ற ஒரு மிகப்பெரிய விலங்கு வாழ்ந்ததாக நம்பப்படுகிறது. கோவில்களில் காணப்படும் யாளி என்ற உயிரின சிலை இதற்கு ஆதாரமாக உள்ளது.
சிங்கமுகமும், யானையின் துதிக்கை மற்றும் வலுவான உடலுடன் காணப்படும் யாளி, இந்த நிலத்தில் வேறு எந்த விலங்குகளாலும் வெற்றி கொள்ள முடியாத ஒரு விலங்காக வலம் வந்ததாகவும், இவை தெய்வங்களின் வாகனமாக இருந்ததாகவும் மக்களிடம் நம்பிக்கை நிலவியது.இதன் காரணமாகவே, இந்த விலங்கு முற்கால அரசர்களால் போற்றப்பட்டு கோவில்களில் அவற்றுக்கு மிகப்பெரிய சிலைகள் அமைக்கப்பட்டன.
ராஜராஜ சோழன் கட்டிய பிரமாண்டமான தஞ்சை பெருவுடையார் கோவிலில் பல்வேறு வகையான யாளிகளை அடையாளம் காட்டும் வகையில் யாளி வரிசை என சிலைகள் உள்ளன.மதுரை மீனாட்சி அம்மன் கோவில் உள்பட பெருங்கோவில்களில் பெரிய அளவிலான யாளி சிலைகள் காணப்படுகின்றன.
இந்த யாளி சிலையின் முழங்காலுக்கு கீழேதான் யானை சிலைகள்அமைக்கப்பட்டுள்ளன. யானையை விட பல மடங்கு பெரிய அளவிலான உருவம் கொண்டவையாக யாளிகள் இருந்ததாக கதைகள் கூறுகின்றன.
பொதுவாக, இந்த யாளி என்ற ராட்சத உயிரினங்கள் என்பவை பண்டைய தமிழர் நாகரிகமான கடலில் மூழ்கிய லெமூரிய நாகரிகத்தில் வாழ்ந்த மிருகங்கள் என்று நம்பப்படுகிறது. சிம்மயாளி, மகர யாளி, யானை யாளி என்று இருந்ததாக கூறப்படுகிறது. இந்த யாளிகள் கோவில்களை பாதுகாப்பதாக பக்தர்கள் நம்புகிறார்கள். இதன் காரணமாக, யாளி சிலைகளை வீடுகளிலும் வைக்கும் பழக்கம் இன்றும் உள்ளது.
0
Leave a Reply